Unordered List

08 நவம்பர் 2011

கமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்!!

பொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாமே சிரிப்புப் பட்டங்களாக இருப்பது பற்றி யாருமே கவலைப் படவில்லை என்பது நமது கவலை.

கலை ரசிகர்கள் இதைப் பற்றி கண்டிப்பாக யோசிக்கவேண்டும் என வேண்டுகிறோம்,





ஆஸ்கார் நாயகன்:

நானெல்லாம் சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் அவரை "ஆஸ்கார் நாயகன்" என்று தான் அழைப்பார்கள். முதலில் இது எதோ அம்பாசிடர் கார் போல ஒரு கார் என்று தான் நினைத்திருந்தேன். பின்புதான் தெரிந்தது அது ஒரு விருது என்று. கமல் பல ஆஸ்கார் விருதுகளை வாங்கிக் குவித்தவர் என்று என எனது பள்ளிகால நண்பன் கூறுவான்.

கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகுதான் தெரிந்தது அவர் அப்படியெல்லாம் ஏதும் விருது வாங்கியவர் இல்லையென்று. ஆஸ்காருக்கு அனுப்பியதாலேயே ஆஸ்கார் நாயகன் என்று பெயர் வைத்துக் கொண்டார் என்று. அட ஆண்டவா!!!

ஆங்கிலப் படங்களையே காப்பியடித்து அவர்களுக்கே அதை அனுப்பிய அண்ணனைக் கிண்டல் செய்யும்விதமாகத் தான் யாரோ இந்தப் பட்டதை இவருக்கு சூட்டினார்கள் என்று கேள்வி!



நம்மவர்:


இவர் மட்டும் என்ன நம்மவர். மற்ற நடிகர்களெல்லாம் வேறு ஊர்க்காரர்களா என்ன ? இவர் நம்மவர் என்றால் ராமராஜன், 'மண்வாசனை' பாண்டியன் எல்லாம் இங்கிலாந்துக்காரர்களா என்ன? என்ன கொடுமை சார் இது? இப்படியா ஒருவரை கிண்டல் செய்வது?

ஆண்டவர்:

இவரை ஆண்டவர் என்று சிலர் சொல்லும்போது சும்மா கிண்டல் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். "ஆழ்வார் பேட்டை ஆண்டவா" என்று பாடல் வந்தபொழுது எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை. கடவுளே இல்லை என்று சொல்பவருக்கு என்ன ஆண்டவர் என்ற பெயர். கிண்டல் தானே? :) You too Vairamuthu Sir?


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்,

உலக நாயகன், உலக நாயகன் என்று இவரை ஏன் சொல்கிறார்கள் என்று யாரவது விளக்கினால் நல்லது. உலகப் படங்களைக் கூசாமல் சுடுவதால் தான் இப்படி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் வேறு ஏதாவது ஒரு ரகசியக் காரணம் நமெக்கெல்லாம் புரியாமல் இருக்கும் என்றுதான் நான் நம்புகிறேன். தயவுசெய்து அதை நமக்கும் சொன்னால் நல்லது.

யாருக்காவது இது தெரியுமா? ப்ளீஸ் சொல்லுங்க

கமல் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த நடிகர் என்பதில்லை சந்தேகமில்லை. இருந்தாலும் அப்படி ஒரு சிறந்த நடிகருக்கு இருக்கும் பட்டங்கள் எல்லாமே அவரைக் குறிவைத்து கிண்டல் செய்யும் விதமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்பதே நமது கருத்து, கவலை எல்லாமே.