Unordered List

03 ஜனவரி 2011

என்ன கொடுமை இது "உலக நாயகன் சார்??? "

பாரிஸ் மற்றும் ஐரோப்பா போக ஆசையா? ஒரு சொகுசு கப்பல் எல்லாம் சுற்றிபார்க்க ஆசையா. "உலக நாயகன்" கமலும் உங்க கூட வருவார்..

நிஜமாவா? எப்படி? அதுக்கு என்ன பண்ணனும்?

அதுக்கு நீங்க "மன்மதன் அம்பு படத்த பார்க்கணும். அதுல தான் இப்படி சுத்தி காட்டுறாங்க"


...........................
இந்த உரையாடல் யாரோ கமலைப் பிடிக்காதவர்கள் செய்யும் கிண்டல் என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் பற்றி நான் ஒன்று சொல்ல முடியும்.. நீங்கள் சென்னையில் FM வானொலி கேட்காதவர்கள்.

நம்புங்கள், கமல் நடித்து வெளியாயிருக்கும் இந்தப் படத்துக்கு இப்படித்தான் விளம்பரம் செய்கிறார்கள்.

தமிழில் அதிக வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர், "உலக நாயகன்" கமல் இவர்களெல்லாம் சேர்ந்து கொடுத்த இந்தப் படத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா?

படன்த்தைப் பற்றி சொல்ல வேற ஏதும் இல்லையா? உண்மையில் பாரிஸ் பற்றி தெரிஞ்சுகணும் என்றால், அதுக்கென்றே பல தொலைக்காட்சிகள் இருக்கிறது. அதுக்கெல்லாம் சினிமா எதுக்கு?

என்ன கொடுமை இது "உலக நாயகன் சார்??? "