அடிமை முறை பழக்கத்தில் இருந்த காலம் அது, கப்பினத்தைச் சேர்ந்த ஹுரோவுடன் ஒரு உணவகத்துக்குள் செல்கிறார் டெண்டல் டாக்டர் என்ற கேரக்டர், அதைப்பார்த்து பதறும் உணவக உரிமையாளர் அந்த ஊரின் ஷெரீபை அழைத்து வரப்போவதாக மிரட்டுகிறார், அழைத்துவர ஓடுகிறார். ஷெரீப் வரும்வரைவரை சாகவாசமாக பீர் குடிக்கும் டெண்டல் டாக்டர் அவர் வந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் அவரை சுட்டுக்கொல்கிறார். ஊரே அதிர்ச்சியில் உறைகிறது. மீண்டும் சாகவாசமாக சாப்பிட அமர்கிறார் ஹீரோ.
மறுபடி அந்த ஊரின் மொத்த காவல்துறை படையும் அந்த உணவகத்தைச் சுற்றி வளைக்க வெளியே வரும் டெண்டல் டாக்டர் கொடுப்பது ஒரு ஷாக். சுடப்பட்ட அந்த ஷெரீப் உண்மையில் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி, அவனைக் கொன்றதுக்கு தண்டனை இல்லை, மாறாக அறிவிக்கப்ப்ட்ட பணப்பரிசை காவல்துறைதான் தனக்குத் தரவேண்டும் எனச் சொல்ல, மொத்த ஊரும் ஆச்சர்யப்படுகிறது. திறமையாக நடிகரான க்ரிஸ்டோப் வால்ட்ஸ் நடித்திருந்த இந்த ஸ்டைலான காட்சி ஜாங்கோ அன்செயின்ட் என்ற படத்தில். கொஞ்சம் வயதான இந்த ஸ்டைலான காரக்டரில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
அதே படத்தில் வில்லன் அறிமுகமாகும்வரை தான் அதுவும். லியனார்டோ டிபாகாப்ரியோ நடித்திருந்த அந்த கேரெக்டர் ஸ்டைலின் உச்சம். அவர் செய்வது எல்லாம் தரமான சம்பவங்கள். டொராண்டினோ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் இதுபோன்ற அருமையாக காட்சிகள் கொண்டது.இவற்றைப் பார்க்குன்போது நம்ம ரஜினிக்கு இதுபோன்ற காட்சிகள் அமைந்தால் கலக்குவாரே என்று யோசித்திபோம். அது போன்று யோசித்த இன்னொருவர் கார்த்திக் சுப்புராஜ், ஆனால் ரசிப்பது மட்டுமல்லாமல் அவர் திறமையான இயக்குனரும் கூட.
பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியும் இதுபோன்ற புத்திசாலித்தனமாக ஸ்டைலான காட்சிகள், ஆனால் பொதுவாக நம்ம ஊரில் மற்ற நடிகர்கள் இயக்குனர்கள் உலக படங்களை அப்படியே காப்பி அடிப்பது போல் இல்லாமல் அந்த அழகியலை மட்டும் எடுத்தாள்வது கார்த்திக் சுப்புராஜின் சிறப்பு. ரஜினியின் நடிப்பு, தனது கதை சொல்லும் திறமை, கொஞ்சம் டொடாண்டினோவின் அழகியல் சேர்த்து கதையின் ஆழத்தையும் சேர்த்து உருவாக்கியதால் பேட்ட மாபெரும் வெற்றி. அது இன்னும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.
கபாலி, காலாவுக்குப் பிறகு ரஜினி வயதான கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருந்ததாகவும் ஆனால் கார்த்திக் சுப்புராஜ் 90s லுக் வேண்டும் என்றதாகவும் ரஜினி தர்பார் இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறார். பேட்ட ரிலீஸ் ஆகி மூன்றாம் நாள், இது எனக்குத் தெரியாதா நானும் 90 லுக் கதை செய்ய்வேன் என்று முருகதாஸ் சொன்னதாகவும் அதுதான் தர்பார் என்றும் சொல்கிறார்.
பேட்ட படத்தில் கார்த்திக் செய்த ஒரு வேலை கவனிக்கத்தக்கது. என்னதான் புது ஐடியாவில் படம் எடுத்தாலும், பழைய ரஜினி படங்களை நினைவு படுத்தும் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்திருந்தார். அந்தப் பாடல்களில் கூட அதைப் பார்க்கமுடியும். புதிதாக அநிருத் ஸ்டைலில் இருந்த அந்த பாடலில் சும்மா எஸ்பிபியை இரண்டு வரி பாட வைத்து அந்த பழைய பாட்டு போல ஒரு தோற்த்தை உருவாக்கியிருந்தார்கள்.
வரலாறு என்பது எப்போதுமே முன்னோக்கி நகர்வது மட்டுமே என்பது வரலாற்றாசிரியர்கள் எப்போதும் சொல்லி வருவது. பொன்னுலகத்தை கடந்தகாலத்தில் தேடுவது எந்த முன்னேற்றமும் அளிக்காது என்பது வரலாறு சொல்லும் பாடம். இருந்தாலும் உலக அளவில் டொனாண்ட் ட்ரெம்ப் வைகையறாவில் இருந்து உள்ளூர் அரசியல்வாதிகள் வரை பேசுவது அதைத்தான்.
தர்பாரிலும் அதுதான் நடக்கிறது. தேவா ஸ்டைலில் ஆட்டோக்காரன் பாட்டுபோல முயற்சித்து ஒரு தேவா பாட்டையே தந்துவிட்டார்கள்
என்னதான் இசையமைப்பாளர் திறமையாக இருந்தாலும் இயக்குனரும் படத்தின் கான்செப்டும் தான் முக்கியம்.
வழக்கமான மொக்க மசாலா அரைக்கும் சிறுத்தை சிவா அடுத்தபடம் என்ற அறிவிப்பு வந்ததும் கொஞ்சம் வருத்தம் வந்தது, புதிதாக எதுவுமே இல்லமல் அநிருத் ஸ்டைல் கூட இல்லாமல் இந்த தர்பார் பாட்டு கேட்கும்போது இதுதான் பேர்டர்ன் எனப் புரிகிறது..
நல்லா படம் எடுத்தா மட்டும் போதாது கார்த்திக் சுப்புராஜ், அந்த ரகசியத்தை மற்றவர்களுக்கும் சொல்லவேண்டாமா. பேட்ட போன்ற சிறப்பான படத்தைத் தொடர்ந்து ஏர்.ஆர்.முருகதாஸ் 90 படம் என்ற பெயரிலும் , அடுத்து சிறுத்தை சிவா 80 என்ற பெயரிலும் எடுக்கப்போகும் கொடுமைகளுக்கும் நீங்களே பொறுப்பு..