நான் பொதுவாகவே non-fiction புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் உடையவன், fictionம் வாசிப்பதுண்டு. இரண்டுமே ஒவ்வொரு வகையில் நமக்குத் தேவை.
சினிமாவிலும் கதைசொல்லிகளும் இருக்கிறார்கள், கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சினிமா என்பது கதைசொல்லிகளுக்கான மீடியம். சமீபத்தில் வந்த லப்பர் பந்து நமக்கு பிடிப்பதற்குக்காரணம் அதில் அரசியல் தான் மையம் என்றாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதால் தான்.சமீபத்திய ரஜினி படங்களில் ஜெயிலர் மிக பெரிய ஹிட் அடித்தற்குக் காரணம் நெல்சன் என்ற கதைசொல்லி உருவாக்கிய பாத்திரங்கள், அந்த கதை சொல்லல். சமீப காலங்களில் உருவான இயக்குனர்களில் முதன்மையானவர் நெல்சன். ஒருவேளை தமிழில் TopGun Maveric, john wick, breaking bad போன்ற படைப்புகள் வரவேண்டுமென்றால் நெல்சன் போன்றவர்களால் தான் அது வரமுடியும்.
இப்போது வேட்டையன் ட்ரைலர் பார்த்தபோது அந்தப் படத்தின் மீது எந்த ஆர்வமும் உருவாகவில்லை, மெதுவா பார்க்கலாம், அல்லது சாய்ஸில் விடலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று காலையில் ஆபீஸ் போனதுமே காலையில் மீட்டிங்கில் என் பாஸ் கேட்ட முதல் கேள்வி இங்கே என்ன பண்ணிட்டு இருக்க, படம் பார்க்க போகலையா என தான். பின்னர் பல நண்பர்கள் படம் எப்படி இருக்கு என கேட்க இன்னும் பார்க்கலை என்று சொல்லி சமாளித்து வந்த்தேன் 🙂
இப்பொது சில நல்லா இருக்கு பல கமெண்ட் பார்க்க மகிழ்சிதான். ஆனால் "ஜெயிலர் விட பெட்டர்" என பகீர் கமெண்டை தடாலடியாக சில ரஜினி ரசிகர்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு வகை படங்கள். உங்களுக்கு இந்த வகை படங்கள் பிடிக்கும் என்றால் நல்லது, ஆனால் இது பிடிக்கும் என்பதற்காக ஜெயிலரைக் குறைப்பது தான் தவறான விஷயம். ரஜினி ரசிகர்கள் அதைச் செய்யக்கூடாது, மீடியா உருவாக்கும் இந்த trapல் மறந்தும் கால் வைக்கக்கூடாது.
நமது ரசனை நமக்காக இருக்கும்வரை தான் நாம் கலைக்காக செலவளிக்கும் நேரம் அர்த்தமுடையது