அவன் எழுதியதைத் தான் நானும் எழுதினேன். ஆனால் அவன் சூப்பர் மார்க், எல்லோரும் பாராட்டுறாங்க. ஆனால் நான் பெயில், எல்லோரும் சிரிக்கிறாங்க, என்ன உலகமடா இது என்று வருத்தப்பட்டான் 'நண்பன்' ஒருவன். அவனுக்கு தெரியாதது என்னவென்றால் இரண்டு பேரும் எழுதியது வேறு தேர்வுகள். வெவ்வேறு கேள்வித்தாள்கள்.
அறிவு குறைவானவர்கள் அப்படியே இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர்களின் அறிவாளிபோன்ற பாசாங்குகளும், அவர்களெல்லாம் அறிவுரை சொல்ல விழைவதும்தான் நமது பிரச்சனை.
பிரதியெடுங்க, ஆனால் கொஞ்சம் புரிந்துகொண்டு பிரதியெடுங்க மக்களே..
.......
கொஞ்சம் நாள் முன்பு த்ரீ இடியட்ஸ் என்று ஒரு அருமையான படம் வந்தது. அது நமது கல்வித்துறையில் இருக்கும் பல அபத்தங்களை கேள்விக்குள்ளாக்கியது. முக்கியமாக புத்தகதிலிருப்பதை அப்படியே வாந்திஎடுப்பதை சாதனையாகக் கருதும் கல்விமுறையையும் அப்படி வாந்திஎடுப்பவர்களை சாதனையாளர்கள் என கொண்டாடும் அபத்தத்தையும்.
இப்போது நடப்பது என்ன? அதை அப்படியே வாந்தியெடுத்து(உரிமம் வாங்கித்தான்) இங்கே ஒரு படம். இவர்களை சாதனையாளர்கள் என பாராட்ட ஒரு பாமரக் கூட்டம். அட ஆண்டவா..
....
த்ரீ இடியட்ஸ் என்ற படமே "Five Point Someone" என்ற நாவலின் தாக்கத்தில் உருவானது தான். ஆனால் அதில் திரைக்கதைக்குத் தேவையான பல புதுமைகளை இயக்குனர் புகுத்தி ஒரு அருமையான வெற்றிப் படத்தைத் தந்தார்.
ஆனால் நமது 'பிரமாண்ட இயக்குனர்" தந்துள்ளது ஒரு காப்பி. அதற்குமேல் எதுவும் இல்லை. அந்தப் படம் சொல்லும் கருத்துக்கு நேர்மாறான ஒரு செயல்பாடு. இந்தப் படத்தில் இலியானாவைத் தவிர வேறேதும் புதுமையைக் காணமுடியவில்லை.
எல்லாப் படத்தையும் பிரதி எடுத்தீங்க சரி.. ஆனால் இப்படி பிரதிஎடுப்பதை விமர்சனம் செய்துவந்த படத்தையுமா பிரதிஎடுப்பீங்க?
சரி. விஜய் படத்துக்கெல்லாம் எதற்கு யோசனை. வழக்கம்போல கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியது தானே? சொந்தமாக யோசிக்கமுடியாவிட்டாலும் நல்லவிஷயத்தை தானே இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள் என கேள்வி எழலாம்.

இதுபோன்ற போலிகளைக்கொண்டாடுவதின்மூலம் நாம் சில உண்மையான திறமைகளுக்கு அநீதி செய்கிறோம் என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.