பரவசமாகத் தான் இருக்கிறது, இவ்வளவு வரலாற்றாய்வாளர்களை ஒருசேரப்பார்பதற்கு. எங்கு இருந்தார்களோ தெரியவில்லை வரவேண்டிய நேரத்துக்கு, அது தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சரியாக ஆஜராகிவிட்டனர்.
இந்த விநானகர் எங்கே இருந்து வந்தார் என்பதே கேள்வி. இவர்களெல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வேறு எங்கிருந்து வந்த நம்பிக்கைகளையும் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் போல. வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு? இருக்கட்டும், நமக்கு வேண்டாம் இந்தப் பிரச்சனை.
நமக்கு தெரிந்தவரை பெரும்பாலான வீடுகளில் இருந்த பிள்ளையார்கள் அந்தந்த தெருமுனைகளிலோ அல்லது கடை வீதிகளிலோ தான் உருவானவர்கள்.
இன்னும் சில வீடுகளில், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொழுக்கட்டையில் உருவான பிள்ளையார்கள் பல.
இதோ வீட்டில் உருவான ஒரு பிள்ளையார்.