ஒவ்வொரு வகையான நண்பர்களுக்கும் ஒவ்வொரு பாடி லாங்குவேஜ் உண்டு. தெரு நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், நண்பர்களில் அலுவலக நண்பர்கள் என. இவற்றை அப்படியே திரையில் பார்க்கும்போது பரவசமாகத் தான் இருக்கிறது. இதில் எல்லா வகையிலுமே நெருக்கமான நெருக்கடியில் தோள்கொடுக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.
நண்பனின், அல்லது ஒரு நண்பனின் அலுவக நண்பனின் வீட்டில் படுத்துக்கொண்டு வெட்டிபேச்சு பேசுவது, 2 வீலரில் சுற்றுவது, விளையாடுவது, சட்டென வரும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவது என இந்தப் படத்தில் பார்த்தது என்னையும் எனது சில நண்பர்களையும். யப்பா.. பேய் மாதிரி எடுத்திருக்காங்க இந்தப்படம்
இன்று இரவு தூங்கமுடியாது என நினைக்கிறேன். வீட்டிலிருந்து படித்த காலத்தில் கிடைத்த பள்ளிக்கூட நண்பர்கள் ஒருவகை என்றால், கல்லூரி காலத்தில் கூட தங்கிப் படித்த நண்பர்கள் இன்னொருவகை. எனது வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய நல்ல விஷயங்களின் பின்னாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு நினைவுகளையும் இனிமையாக கிளறுகிறது இந்தப்படம்.
நண்பர்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் செய்திருக்கக்கூடிய ஒரு செயலை மற்றவர்கள் செய்யும்போது தெரிந்துவிடுகிறது.
" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். எனது முக்கியமான, இப்போது காணாமல் போந பல நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்ள வைத்ததற்கு.