ஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை காப்பியடித்த ஒரு ஆங்கிலப் படம் நமது கவனத்திற்கு வந்துள்ளது.
தமிழ் படத்தை காப்பியடித்த அந்த ஆங்கிலப் படம் இதுதான். A History of Voilence (https://en.wikipedia.org/wiki/A_History_of_Violence).
இது நமது பாட்சா படத்தின் அப்பட்டமான காப்பி. உலகப் புகழ் பெற்ற "உள்ளே போ" காட்சிகூட அப்படியே உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :)
இந்தக் கதையைக் கேளுங்கள்..
ஒருஊரில் ஒருவன் அமைதியாக ஒரு ஹோட்டல் நடத்திவருகிறான். பாட்சவில் ஆட்டோ..
அப்போது சில ரௌடிகள் வம்பிழுக்க அமைதியாக இருக்கிறான். பின் வேறு வழியின்றி அவர்களை அடிக்கிறான். முதல் பிரச்சனை..
பின்னே என்ன? ரௌடிகள் அவன் வீட்டின்முன்னே வருகிறார்கள். அவர்கள் கடத்தி வருவது அவனது மகனை. (பாட்சாவில் தங்கச்சியை) அவனை வைத்து மிரட்டுகிறார்கள். ஹீரோ அங்கு வருகிறார். ஹீரோவின் மனைவியும் பையனும் வில்லன்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அப்போது ஹீரோவின் பார்வையில்
ஒரு மாற்றம்..
பிறகு என்ன? அதே தான்.. "உள்ளே போ!!".
நம்பமுடியாமல் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்க ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்..
இப்படிப் போகிறது இந்தப் படம்.
பாட்சா வந்தது 1995 -இல், இந்தப் படம் வந்தது 2005 இல்.
தலைவர் படத்தை இப்படி காப்பியடித்து வைத்திருக்கிறார்களே இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையா?
யாராவது இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?
--------
இது இப்படி இருக்க இப்போது வந்துள்ள "KUNG FU PANDA 2" கூட ரஜினி படத்தின் காப்பி என்பதுதான் இப்போதுள்ள பரபரப்பான பேச்சு.
இது எந்த ரஜினி படம் என்று நான் சொல்லப்போவதில்லை. நீங்களே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்
இந்தக் கதை என்னவென்றால்..
ஊரில் பன்ச் டைலாக் பேசிக்கொண் டு ஜாலியாக திரியும் ஹீரோவுக் கு திடீரென தன்னை வளர்த்தது தன் உண்மையான அப்பா இல்லை என்று தெரிகிறது. எனவே அவனது உண்மையான பெற்றோர் யாருன்று தேட ஆரம்பிக்கிறார்.
அப்போது பக்கத்து ஊரில் பிரச்சனை செய்யும் வில்லனைப் பார்க்கிறார். அந்த வில்லன்தான் ஹீரோ அவரது பெற்றோரைப் பிரிய காரணமானவர். சட்டென பிளாஷ்பாக் அவருக்கு ஞாபகம் வருகிறது..
பிறகென்ன.. பழிக்குப் பழி..
இடையிடையில் ஆன்மீக தத்துவ வசனங்கள், வில்லன் எரியும் வெடிகுண்டை கையில் பிடித்து மறுபடி வில்லன் மீதே எறியும் காட்சிகள் என ஒரே பரபரப்புதான்
இது என்னபடம் என்று யோசித்தால் பல ரஜினி படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டுகிறது.
எனக்குத் தெரிந்து ரஜினி இதுபோன்ற கதையில் ஒரு பத்து படத்திலாவது நடித்திருப்பார் என நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்தனை படங்கள் ஞாபகம் வருகிறது?
--
இதன் மூலம் நாம் சொல்லவருவது என்னவென்றால்,எத்தனை பேர் காப்பியடித்தாலும் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை ஹாலிவூட்-க்கும் சொல்லிக்கொள்கிறோம். :)