பல நண்பர்கள் ரெகெமெண்ட் செய்து நேற்று தியேட்டரில் லப்பர் பந்து படம் பார்த்தேன். தியேட்டரில் நேற்று முழு கூட்டம், நான் பார்த்த தியேட்டரில் இரண்டாம் பகுதியில் மக்கள் ஆர்வமான சிரித்து கைதட்டி பார்த்தது உணர முடிந்தது.
படம் நல்லா இருக்கு என சொல்லும்/எழுதும் பலரும், இதில் கெத்து (தினேஷ்) கேரக்டர் தான் சிறப்பு, அவர் தான் ஹீரோ என சொல்வதை கவனிக்க முடிகிறது. ஆனால் அது மையம் இல்லை என்றே நினைக்கிறேன். வெங்கட் பிரபு ஸ்டைலில் theatre momentகளை ரசித்து நல்ல படம் என்று சொல்லும் ஒரு ரசனை உருவாகிவருவதன் விளைவு இது. இதில் விஜயகாந்த், கெத்து எல்லாமே சின்ன சுவாரஸ்யங்கள், தியேட்டர் மொமெண்டுகள் அவை படத்தை சுவாயஸ்படுத்துகின்றன அவ்வளவு தான்.
உதாரணமா விஜயகாந்த் இல்லாமல் அந்த இடத்தில் இன்னொரு நடிகர், உதாரணாமா முரளியோ வைத்திருந்தாலும் கேரக்டரிலோ அல்லது வசனத்திலோ கூட பெரிய மாற்றம் வந்திருக்காது.
சிஎஸ்கே ரெபெரென்ஸ் மற்றும் விஜயகாந்த் ரெபரென்ஸ் இரண்டுமே GOAT படம் விட இதில் இன்னும் கொஞ்சம் கவனிப்பட்டது. எங்கள் ஊரில் நானென்னால் ரஜினி ரசிகராக இருந்த பள்ளி காலத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் அவரை அண்ணன் என்ற இடத்தில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு படத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் காட்டப்பட்டது மகிழ்ச்சி தான் ஆனால்,
விஜயகாந்த் ரசிகர் என சொல்லப்படுகிறது/காட்டப்படுகிறதே தவிர அந்த கேரக்டரில் விஜயகாந்தை பார்க்கமுடியவில்லை, ரஜினி ரசிகர்கள் கேரக்டரிலேயே ரஜினி பெர்சனாலிட்டி இருக்கும். அது போல சிலரைப் பார்த்ததுமே ரஜினி, விஜயகாந்த் அல்லது கமல் ரசிகர்கள் என கூட சொல்ல முடியும். இந்தப் படத்தில் அப்படி இல்லை.
அன்பு என்றெ கேரக்டர் என்ன செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை மற்றும் அரசியல். திரைக்கதையாகவும் அது அன்பு என்ன செய்கிறான் என்பதில் ஆரம்பித்து, அதில் தான் முடிகிறது. மிக நேரடியாக. படம் நல்லா இருக்கிறது என பாராட்டுவதோ, அல்லது விவாதத்துக்குறியது விமர்சிப்பததோ இதில் தான் இருக்கவேண்டும்.
அன்பு விட கெத்து கேரக்டர் மேல் கவனம் என்பது இந்த படம் சொல்லும் அரசியலை பார்க்கத் தயங்குவது/மறுப்பது தான்.