தெலுங்கானாவில் ப்ரியங்கா ரெட்டிக்கு நடந்துள்ள கொடுமை மற்றும் கொலை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த பெரிய ஆபத்தில் சிக்க அவர் ஏதும் வழக்கத்துக்கு மாறாகச் செய்யவில்லை, தன் அன்றாட வாழ்க்கையில் அவர் செல்லும் இடத்திலேயே அவ்வளவு பெரிய ஆபத்து காத்திருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களாலேயே ஆபத்து என்பது அனைவருக்கருகிலும் எப்போதும் அருகிலிருக்கும் ஆபத்து இருக்கின்றது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது, இது திகிலானது.
இதுபோன்ற சமயங்களில் மக்கள் கோபப்படுவதும் கொதிநிலையடைவதும் உடனடியாக கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என வேண்டுவதும் இயல்பானது, நமக்கு உணர்வு இருக்கின்றது என்பதற்கான அடையாளம் அது. ஒரு சிவில் சமூகத்தில் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மொத்தமாகவே பாதுகாப்பாற்ற கைவிடப்பட்ட மனநிலையில் இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
இது சம்பதமான ஒரு செய்தி கவனிக்கவைக்கிறது. இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளி இரண்டு வருடங்களாக லைசென்ஸ் கூட இல்லாமல் லாரி ஓட்டி இருக்கிறார், இந்த சிறிய குற்றத்துக்காக போலீஸ் பிடியில் சிக்கி தப்பித்திருகிறார்.
முன்பு படித்த ஒரு சம்பவம் இப்போது நினைவுக்கு வருகிறது, நியூயார்க் நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துகொண்டிதுந்த 80களில் மேயராக தேரிந்தெடுக்கப்பட்டவர் Rudy Giuliani, அவர் William J. Bratton என்பவரை போலீஸ் தலைவராக நியமித்தார். ஆட்சி கையில் இருந்த மேயரும், அதிகாரம் கையில் இருந்த போலீஸ் தலைவரும் நம்பியது சிந்தனையாளார்களின் வழிகாட்டலை. அவர்கள் ஆலோசித்தது
ப்ரோக்கன் விண்டோ தியரியை உருவாக்கியவர்கள் George L. Kelling மற்றும் James Q. Wilson. ஆகிய சிந்தனையாளார்களை.
ப்ரோக்கன் விண்டோ தியரி (Broken Window Theory) என்பது, ஒரு தெருவில் கவனிக்கப்படாத ஒரு வீட்டில் ஒரு ஜன்னல் உடைந்திருந்தால் சில கொஞ்சம் நாட்களிளேயே இன்னொரு ஜன்னலும் உடைய வாய்ப்பிருக்கிறது. அதைத்தொடந்து கொள்ளை கூட நடக்க வாய்ப்புண்டு என்பது. ஏனென்றால் அது கவனிப்படாத இடம் என்ற எண்ணம் குற்றத்தை வரவழைப்பது. சுத்தமான இடத்தில் குப்பைபோட மக்கள் தயங்குவார்கள். ஆனால் முதலில் ஒருவர் சின்ன குப்பை போட்டால் சிறிது நேரத்தில் அது பெரிய குப்பை மேடாகிவிடும். அதைப் போல.
ப்ரொக்கன் விண்டோ தியரியை உருவாக்கிய கெல்லிங்க்கை ஆலோசாகராகக் கொண்டு, நியூயார்க் நகரத்தின் பெரும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்தது.ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது.
இந்தக் கூட்டணி முதலில் குறி வைத்தது எளிய சிறிய குற்றங்களை. பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது, பொதுவெளியில் குடித்தல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் இவற்றில் ஆரம்பித்து அனுமதியற்ற இரவு விடுதிகள் உள்ளிட்டவை தடுக்கப்பட்டன. இவற்றால் தோன்றும் நேரடி மாற்றங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும். இதனால் ஏற்பட்ட ஒழுங்கின் காரணமாக பொது மனநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் வந்தது. ஆச்சர்யகரமாக விரைலேயே கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்கள் கட்டுக்குள்வந்தன.
இது இரு வகைகளில் செயல்படுகிறது. மொத்தமாக ஒரு ஒழுங்கு இருப்பதால் குற்றம் செய்யும் மனநிலை தடுக்கப்படுகிறது. பல சமயங்களில் பெரிய குற்றம் செய்யவிருப்பவர்கள் இதுபோன்ற சிறிய விஷயங்களில் சிக்கி விடுகின்றனர்.
ப்ரியங்கா ரெட்டி கொலையில் முக்கியக் குற்றவாளி சில தினங்களுக்குமுன் போலீஸில் சிக்கி இருந்தாலோ, அல்லது இது போன்ற ஒழுங்கின் காரணமாக பொறுப்பாக லைசென்ஸ் எடுத்து விதிகளை மதித்து நல்ல வெற்றிகரமான ஓட்டுனராக வாழ்ந்திருந்தாலோ இந்த குற்றம் நடந்திருக்காதே என்று நினைக்கவும் தோன்றுகிறது.
நம் சமுதாயத்தில் கட்டற்ற குடியும் கவனிப்பட்டாத அது தொடர்பான 'சிறிய' வன்முறைகளும் நீருபூர்த்த நெருப்பாக இருந்ததையும் அதனால் மக்கள் தொடர்ந்து பெரிய குற்றங்களுக்குச் செல்வதையும் முன்பே ஒருமுறை விவாதித்திருந்தோம். (கீழே லிங்க்)
இதை பலவழிகளில் யோசிக்கலாம், சரியான நேரத்துக்கு வரும் அலுவலகத்தில் சரியான வேலை நடக்க வாய்ப்பிருக்கிறது. காலையில் சரியான பழக்கவழக்கம் கொண்ட மாணவர்கள் சரியாக படிக்க வாய்ப்பிருக்கிறது.
இதற்கு ஒரு மாற்றுக்கருத்து எழலாம். இந்த முறை குற்றமே இல்லாமல் செய்துவிடுமா என்று. திட்டமிட்டு செய்யும் குற்றவாளிகள் வேறு, அவற்றை கையாள வேறு முறைகள். ஆனால் இந்த ப்ரோக்கன் விண்டோ தடுப்பு முறையின் மூலம் குற்றம் உருவாகும் வாய்ப்பை தடுக்க முடியும் என்பதே கருத்து. அணுகக் கூடியதாக இருக்கவேண்டிய காவல்துறை, அதில் வெளிப்படைத் தன்மை எல்லாம் கூடவே செய்யக்கூடிய விஷயங்க்கள்.
ஒரு நவீன அரசு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களையும் கட்டுப்படுத்தும் அரசிலமைப்பு உடையது. அதுபோல ஒரு அதிகாரம் என்பது ஒரு நல்ல சிந்தனையாளரின் சிந்தனையை செயலாக்க முடியும்போது நல்ல விளைவுகளைத் தருகிறது. இந்த ப்ரோக்கன் விண்டோ நிகழ்வு இதற்காக சாட்சியாக இருக்கிறது.
வரலாற்று நோக்கில் பார்க்கும் சிந்தனையாளர்கள் தீர்வுகளைத் தரமுடியும், அவற்றை கையாளத் தெரிந்த அதிகாரிகள் வெற்றியடைய முடியும், அந்த அதிகாரிகளை பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியைத் தரமுடியும்.
Links:
2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்! - விகடன்
குடி வன்முறையின் வரலாற்றுத் தருணம்

George L. Kelling |