Unordered List

17 அக்டோபர் 2023

TTF வாசனும் சட்டங்களும்

பொதுவாக தீவிரவாத தாக்குதல் நடக்கும்போது ஒரு வாதம் வைக்கப்படும், அமெரிக்காவில் தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்ககளை விட ரோடு ஆக்ஸிடெண்டால் இறப்பவர்கள் அதிகம், ஆனால் தீவிரவாதத்துக்கு கொடுக்கப்படும் விளம்பரமே பரபரப்புக்க்குக் காரணம் அதை பெருசா எடுத்துக்கூடாது என, ஆனால் அது அப்படி பார்க்கப்படக்கூடாது


இங்கு எண்ணிக்கையை விட செயல் தான் பிரச்சனை.

இங்கு ஓட்டப்படும் பைக்களில் சில வளர்ந்தநாடுகளுக்கு சமமான எஞ்சின் இருக்கலாம், ஆனால் நமது சாலைகள் வேறுமாதிரியானவை. சமீபத்தில் ஏதாவது டூவீலர் ஷோரூம் போயிருந்தால் ஒன்று கவனிக்கலாம், இப்போது பைக் விட ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகின்றன.

நம் சாலைகளில் கவனித்தால் ஸ்கூட்டர்கள் தான் அதிகம். குடும்பப்பெண்கள் குழன்தைளை பள்ளியில் விடவும், சாப்பாட்டு பையுடன் ஆபீஸுக்கி செல்லும் ஆட்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில், பவுர்புல் பைக், அதிரடி வேகம் என்பது பெரும் ஆபத்து. சாலையில் பொருப்புடம் இருப்பதும், எளிவர்களுக்கு இடம் அளிப்பதுமே இங்கு இந்த மக்களை இயங்கச்செய்யும்.

ஒருமுறை பாண்டிச்சேரியில் யு டர்ன் எடுக்கமுயன்ற ஒரு ஸ்கூட்டியை அதிவேகமாக வந்த ஒரு 200cc பைக் நடுவில் மோதி இரண்டாக உடைந்ததை நேரடியாகப் பார்த்தேன். அந்தப் பெண் என்ன ஆகியிருப்பார் என யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண் மீதும் தவறிருக்கலாம், ஆனால் அது ஊருக்குள் இருக்கும் சின்ன சாலை, அதில் அந்த பெண்ணுக்கு அது நடந்திருக்கூடாது

இதில் என்ன சட்டம் சார் மீறப்படுது என கேட்பது ஒருவிதமான ignorant மனநிலை. இண்டெர் நெட் முதலில் வந்தபோது அதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் முன்னர் குற்றஙகளே நடக்கவில்லை என்று சொல்வதுபோன்றது அது.

புதிய விஷயங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின்னர் மெதுவாகவே அதற்கான சட்டங்கள் உருவாகும். அதுவரை நம்மை காப்பது ஒரு பொது அறமும், common senseம்

மிக எளிதாக அன்லிமிடடட் பபேயில் ஒருவர் ஒரு கிலோ ஐஸ்கீரீம் சாப்பிடுவதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை, ஆனால் அப்படி ஒருவர் செய்வது மொத்த ஸிஸ்டத்தையும் குலைக்கும்.

அரசு சாலைகளை சரியாக மெயிண்டெயின் செய்யவில்லை என்பது சரியான தனி குற்றச்சாட்டு. அதை தனியாக டீல் செய்யவேண்டும்.

சில நாட்கள் முன், பாலகுமாரனை முன்வைத்து எழுதியது இதற்கு இப்போது நினைவுக்கு வருகிறது

---

ஒரு நண்பர் கேட்டார் என வீட்டில் பாலகுமாரன் புத்தகங்கள் எங்கே என தேடினால் பந்தயப்புறா கிடைத்தது.

அதில் ஒரு சம்பவம்

இன்று ஆக்டிவா உருவாக்கிய புரட்சியால், ஸ்கூட்டர்கள் நிறைய வந்து பெண்கள் பெரும்பாலும் எளிதாக வேலைக்குப் போக, குழந்தைகளை பள்ளிகளுக்கு விட என இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இன்றும் பெண்கள் ஸ்கூட்டர், கார் ஓட்டுவதைப் பற்றி கிண்டகளும் ஜோக்களும் நிறையவே இருக்கின்றன.

அப்படியென்றால் முதன்முதலில் மெபெட் வந்தகாலத்தில் எப்படி இருந்திருக்கும், அந்தக் காலத்தில் அதை ஓட்டிய பெண்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பயம் இருந்திருக்கும், அதை இந்தக் கதையில் பாலகுமாரன் அவருக்கே உரிய இயல்பான நடையில் இறன்கி அடிக்க சொல்லியிருக்கிறார். வழக்கம் போல ஒரு பாலகுமாரன் ஸ்டைல் பீல் குட் நாவல்நான் கார் ஓட்டப்பழகும்போது ஒருமுறை கார் ஆப் ஆக, நான் லேசா டென்ஷாகியசமயம் என் ட்ரெயினர் சொன்னது, சார், எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் கார் என இருந்தால் ஆப் ஆகத்தான் செய்யும், சின்னத் சின்னத் தவறுகள் நடக்கத்தான் செய்யும் அதை காட்டிக்காம டென்ஷனாகாம சமாளிக்கிறதுல தான் எக்ஸ்பீயன்ஸ் இருக்கு என.

--

இந்த பக்கத்தை வாசிக்கும்போது அது நினைவுக்கு வந்தது

ரோட்டில் ஓட்ட தயங்கும்/பயப்படும் பெண்களுக்கான பாலகுமாரன் அட்வைஸ் - "சர்தான் போடா"