பில்கேட்ஸ் ஒருமுறை சொன்னார், கம்பூட்டர்கள் நமக்கு வேலை செய்வதை விட, நாம் தான் கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும்படி அதிகமாக பழகுகிறோம் என்று. மவுசை அசைப்பதும் கீபோர்டை தட்டுவதும் மனிதர்களின் இயல்பான செயல்பாடா என்ன? இப்போதெல்லாம் மக்களின் முக்கிய வெளிப்படே ஸ்மார்ட்போன் திரையைத் தடுவுவதுதான் இல்லையா.
நமது சிந்தனையின் வெளிப்பாடு கீபோர்டும் ஸ்மார்ட்போன் திரையும் என்று ஆகிவிட்டதால் அவற்றின் வேகமே நமது வேகம் என்றாகிறது. லேப்டாப் இருந்தாலும் கீபோர்டுக்கு எனது சாய்ஸ் டிவிஸ் கோல்ட் கீபோர்ட், அது பழுதானதும் அதே ப்ராண்ட் வாங்கலாமா அல்லது வேறு வாங்கலாமா என்ற யோசனைக்கு அமேஸான் இல்லாத இந்த கொரானா காலகட்டம் கொஞ்சம் நேரம் தருகிறது. இதே பிராண்ட் வாங்குவதற்கு காரணம் ஒன்றுதான் இது மெகானிகல் கீபோர்ட். அதனால் டைப் வேகம் அதிகம் மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனி பட்டன்கள்.
கீபோர்டில் மொத்தம் மூன்று எழுத்துக்கள் வேலை செய்யவில்லை, E, R மற்றௌம் எண் எட்டு. அதனால் இதே பிராண்ட் வாங்குவதை விட இருக்கும் கீபோர்டையே சரி செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஒரு ஸ்க்ரூட்ரைவர் மற்றும் வெகுநாட்களுக்குப் பின் பயன்படுத்தும் சால்டரிங் ராட் துணையுடன்.
கீபோர்டிலிருந்து சில பட்டன்களை உருவி இதில் போட்டால் வேலை செய்தது ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. ஓடும்போது சகதியில் கால் வைப்பதைப்போன்று இந்த மாற்றப்பட்ட கீக்கள் வேகத்தை தடை செய்தன, அவ்வளவு பழையவை.
மீண்டும் திறந்து மிக குறைவாக பயன்படுத்தும் கீக்கள் எது என ஆராய்ச்சி செய்து சில பங்ஷன் கீக்களை இவற்றில் பொருத்தி, இந்த பழைய கீக்களை குறைவான பயன்பாடுடைய அவற்றைல் பொருத்தியபின் வேலை முடிந்தது, கீபோர்ட் சரியான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
வீக்கெண்டில் ஒரு மாறுபட்ட வேலை, தவிற்கப்பட்ட ஒரு அமேஸான் பர்சேஸ் உடன் வேகமான டைப்பிங் என கரோனா கால நடவடிக்கை சிறப்பாக முடிந்தது.