"Captain Cool" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தகட்ட திட்டம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்போது இந்தியா வித விதமாக வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு சச்சினையும் நம்மையும் ராக்கிங் செய்துவருவதால் சென்னையில் நடக்கும் போட்டிக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும் என்று ஒரு உளவுத்துறை அறிக்கை சொல்லவதாக சொல்லப்படுகிறது.
இதனால் தோனி அதிரடி முடிவுகள் எடுத்துள்ளதாக செய்திகள் கசிகின்றன..
விளையாடத் தெரிந்தவர்களே விளையாடுவது மிகவும் விளையாட்டுத் தனமானது என டோனி அந்த முடிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த முடிவை தெரிந்து கொள்ளும் முன் கொஞ்சம் அவரின் சமீபத்திய நடவடிக்கைகளை புரிந்துகொள்வது நலம்.
"அஷ்வின் நன்றாக விளையாடுபவர். அவரை மீண்டும் விளையாட வைப்பதில் அர்த்தம் இல்லை. பியுஷ் சாவ்லா தான் சரியாக விளையாடவில்லை எனவே அவருக்குத் தான் விளையாட்டின் மூலம் பயிற்சி தர வேண்டும் என அவர் கூறியது குறிப்பிடத் தக்கது.
இதற்கு ஆதாரமாக பியுஷ் சாவ்லா கேவலமாக விளையாடிய இரண்டு போட்டிகளின் score card -களையும் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
(அதேபோல் கேவலமாக விளையாடும் ஸ்ரீசாந்த்-க்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் முகம் தோனிக்கு பிடிக்கணும் இல்ல.. அதுக்கு மேல சொல்லற பேச்சு கேக்குறதில்லை..)
தோனியின் இந்த வியூகம் எதிர் அணியினரை வெகுவாக குழப்பும் என இந்திய பத்திரிக்கைகளால் பாராட்டப் பட்டது.
இந்த வியூகத்தின் தொடர்ச்சியாகவே அன்று மிக கேவலமாக பந்து வீசிய ஆசிஸ் நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் வாய்ப்பு கொடுக்கப் பட்டது. நன்றாக விளையாடுபவர்களுக்கே வாய்ப்பு என்ற சிந்தனையை டோனி தகர்த்து வருவது அறிவு ஜீவிகளால் பெரிதும் பாராட்டப் படுகிறது.
டோனி அடுத்து என்ன பேட்டி கொடுப்பார் என்று வெகுவாக எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவர் கொடுத்த அடுத்த பேட்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.
ஜெயிக்கவேண்டிய போட்டிகளைக் கூட தோற்பதில் கில்லாடியான தென்னப்பிரிகாவிடமே ஒரு அருமையான போட்டியில் தோற்றபின் உடனடியாக பின்வருமாறு பேட்டியளித்தார்.
"வீரர்கள் மக்களுக்காக(கூட்டத்திற்காக) விளையாடக் கூடாது. எல்லோரும் 4 மற்றும் 6 . அடிக்க முயற்சிக்க கூடாது. 40 ஓவர் பின்னாலும் பொறுமையாக மொக்கையை போடவேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களை நோக்கி கோபமாகக் கூறினார்.
"எப்படி விளையாட வேண்டும் என்று எதற்கு நமக்கு சொல்லுகிறார் என தொலைக் காட்சியில் பார்த்த பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக,
"கிரிக்கெட் விளையாடுவது எப்படி" என்று தினமும் காலை டோனி தொலைகாட்சியில் தோன்றி விளக்கம் அளிப்பார் என்றும் செய்திகள் வருகின்றன.
இப்போது புரிகிறதா வியூகம்..
அதாவது முதலில் நன்றாக விளையாடுபர்களுக்கு ஓய்வு. மொக்கையாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு பின்பு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கம்.
ஆம்.. அதே தான்..
"பார்க்கவரும் மக்கள் சிலருக்கு விளையாட வாய்ப்பு!!!!"
இதன் மூலம் எதிர் அணியினரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்துவிடலாம்.. What An IDEA Dhoni Jii...
அடுத்த போட்டி சென்னையில் எனபதால் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதை தவறவிட விரும்பாதவர்கள் சேப்பாக்கம் நோக்கி திரண்டு வருமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்
தகுதி என்னவென்றா கேட்கிறீர்கள்? சற்று ரிஸ்க் எடுத்து பியுஷ் சாவ்லா மற்றும் ஆசிஷ் நெஹ்ரா முகத்தை சற்று உற்றுப் பார்க்கவும். உங்கள் முகம் அதுபோல அப்பாவியாக இருந்தால் வாய்ப்பு அதிகம்.
தப்பித் தவறி ஸ்ரீசாந்த் போல இருந்தால்... சாரி..
திரண்டு வருவீர்... அணியில் இணைவீர்..
LINKS:
Chawla playing as he needs more practice: Dhoni