கலைகளில் கணினி பயன்பாடு என்பது கணிப்பொறி அறிமுகமாதில் இருந்து வரும் விவாதம் என்றாலும் அதன் பயன்பாடு தொகுத்துக்கொள்ள உதவுகிறது என்ற அளவில் தான் இருக்கின்றது. பல புத்தகத்த் தொகைக்குப் பதிலாக கூகிளில் தேடுவதும் பேப்பருக்கு பதிலாக கணினியில் எழுதுவதும் கணினியின் உதவிதான். இருந்தாலும் அது புதிய சிந்தனைகளைத் தரமுடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றது.
செயற்கை அறிவு சார்ந்த முன்னேற்றத்தில், துறை சார்ந்த செயற்கை அறிவில் குறிப்பிட்டதக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இவற்றுக்கு மனிதருக்கு இருக்கும் பிரஞ்ஞை இல்லை. அவற்றுக்கு பிரஞ்ஞை உருவாக்குவது சாத்தியமா, அப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது இப்போது பிரபலமான விவாதமாக இருக்கின்றது. சமீபத்தில் பார்த்த வேஸ்ட் வேர்ல்ட் தொடர் இந்தப் பிரச்சனையை அழகாகக் கையாண்டுள்ளது.
இன்று படித்த ஒரு சிறுகதை இன்னும் முக்கியமானது கனடாவைச் சேர்ந்த நாவலாசிரியரான Stephen Marche, இந்தக் கருவில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆனால் அந்தக் கதையை எழுத உதவியது ஒரு செயற்கை அறிவு மென்பொருள்.
இந்தக் கதை, அறிவியல் கட்டுரைகளை வெளியுடும் மிக முக்கியமான தளமான MIT Technology Review என்ற தளத்தில் வந்துள்ளது. அதனால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தாளரின் படைப்பு என்பது அவரது அனுபவம் மற்றும் வாசிப்பில் இருந்து வருவதென்றால் ஒரு செயற்கை அறிவு நிரலுக்கு இதுவரை வெளிவந்துள்ள மீபுனைவு கதைகளின் தொகுதிகளைக் கொடுத்து அதனிடம் புதிய சிந்தனையை பெரும் முயற்சி இது. அந்தக் கதையின் தலைப்பு கிருஷ்னனும் அர்ஜுனனும்.
இவை வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் அர்ஜுன் என்பது கிருண்னன் எழுதிய ஒரு மென்பொருள் நிரல் என்று இந்தக் கதையில் வருகிறது. கிருண்னனின் சிந்தனையின் விளைவு அர்ஜுனன் என்பது சுவாரஸ்யமான கருவாக இருக்கின்றது.
எழுத்தாளர் ஜெயமோகனுடன் இந்தவாரம் வெண்முரசு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த சந்திப்பின்போது ஒரு கேள்விக்கு பதிலில் மகாபாரத சிந்தனை அரசுகள் நிலையில் இல்லாமலிருந்தாலும் gross root level ல் இந்தியாவில் பல்லாண்டுகாலமாக இருப்பதை குறிப்பிட்டிருந்தார். அது இந்தியாவையும் தாண்டி அறிவுலக சிந்தனையில் இருப்பதையே இது காட்டுகிறது.
இந்திய அறிவுலகத் தொகுப்பாக இருக்கும் வெண்முரசு கொண்டாட்ட சமயத்தில் உலகத்தின் அத்தனை மீபுனைவு சிந்தனைகளின் இருந்து உருவான ஒரு கதைக்கு கிருண்னனும் அர்ஜுனனனும் என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.