எஸ்பி முத்துராமன் படங்களிலேயே எனக்குப் பிடித்தது தர்மதுரை தான் - என சொல்கிறார் இயக்குனர் லேகேஷ் கனகராஜ், திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் அதை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
எந்த உலகத்தில் வாழ்கிறார்கள் இவர்களிருவரும் என ரஜினி ரசிகர்கள் ஆச்சர்யமடைகிறார்கள்
தர்மதுரை மட்டுமல்ல, லோகேஷுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த விக்ரம் படத்தில் ஒரிஜினலை இயக்கியதும் இயக்குனர் ராஜசேகர். அவர் ஒரு தனித்துவமான இயக்குனர்.
விக்ரம் 2 ப்ரோமஷன் சமயங்களில் ஒரினல் படத்தில் இயக்குனர் பெயர் ஒருமுறை கூட சொல்லப்படவில்லையே என யோசித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது தர்மதுரையில் இருந்து கூலியின் ஒரு லுக் இன்ஸ்பர் என்று சொல்லும் லோகேஷ் அது ராஜசேகர் என்று தெரியாமலே பயன்படுத்தி இருக்கிறார் என்பதில் கன்ஸிஸ்டண்டா இருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
ஆனால் எப்போதுமே பாசிடிவிடியுன் எல்லோர் மீதும் பெரிய மரியாதையுடன் பேசும் லோகேஷ் இதை தெரிந்தே செய்திருக்க வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன், அந்தக் காலத்தில் வந்த பல சந்திரபோஸ், சங்கர் கனேஷ் பாடல்களை அது ஹிட் ஆனதும் இளையராஜா பாடல்கள் என பொதுவாக நடக்கும் misattribution போல இதுவும் ஒரு உள்நோக்கமற்ற தவறான புரிதலாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது எனவே நம்புகிறேன்.
ஆனால், ராஜசேகர் அப்படி மறக்கப்படக்கூடிய இயக்குனர் அல்ல
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாவீரன்,மாப்பிள்ளை கடைசியாக தர்மதுரை என ரஜினிக்கு பல வித்தியாசமான ஹிட்களை கொடுத்தவர் இந்த ராஜசேகர். ரஜினியின் நண்பர் என அறியப்பட்டாலும் விஜயகாந்துக்கு கூலிக்காரன், கமலுக்கு காக்கிச்சட்டை, விக்ரம் என இன்றும் நினைவில் இருக்கும் ஹிட்களைக் கொடுத்தவர். மலையூர் மம்பட்டியான் உட்பட.
இயக்குனர்கள் மீது மரியாதை இருக்கும் லோகேஷுக்கு இதை யாரும் சுட்டிக்காட்டவேண்டும், கூலி பற்றி பேசும்போது மட்டுமல்ல விக்ரம் பற்றி பேசும்போது கூட ஒரிஜினல் இயக்குனர் ராஜசேகர் பெயர் நினைவுகூறப்படுவது லோகேஷின் பாடிசிவ் அப்ரோச்சுக்கு பெருமையே சேர்க்கும்.