மதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான் வொர்த் நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.
இரவு எக்மோர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு...