"அவரா, நல்ல மனுஷன். பாவம். ச்சு" என்றார்.
எனக்கே ஏன் அவரைப்பற்றி கேட்டோம் என்று ஆகிவிட்டது. "அவருக்கு என்ன பிரச்சனை?" என்றேன்.
"பிரச்னையல்லாம் ஏதும் இல்லை. ரெம்ப நல்ல மனுஷன்" என்றார். இந்தமுறை அவர் முகபாவம் இன்னும் பரிவோடும் சோகமாகவும் இருந்தது.
சரி பேச்சை மாற்றலாம் என்று நினைத்து
"அவர் தம்பியும் அந்த ஊர்ல தான் இருக்கார், அவர தெரியுமா " என்றேன்
"அட அவரா, நல்ல தெரியுமே. சின்னவரு தான், ஆனா ஆளு செம திருடன். ஹா ஹா " என்றார்.