திடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.
சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம். 
   
   
 
சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.
வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச்  சாலையில் ஒட்டுவதால் எனக்கு  சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற  ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது.  மலைச் சாலை மிகவும்  நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான  அறிவுப்புப்  பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல  அனுபவம் தான்.     
நல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும்  வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம்  முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.
   
எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.
    
உண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில்  போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம்  அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.
  
ஏலகிரியை  அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே,  இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள்  மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள்  எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.   
நல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி  படகுசவாரியைத் தவிர  சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும்  இருப்பதாகத்தெரியவில்லை.  நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.
  
உண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக  நினைக்க முடியவில்லை.  ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு  எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.
    
திரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.
 
அங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று  பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம்  எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.      
மலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல்  ஒரு பயணம் சென்று  வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில்  கார் ஓட்டிப் பார்க்க  ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.
  
ஏலகிரி.. "சும்மா" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.



