எதிர்பாராமலோ அல்லது மிக மிக எதிர்பார்த்து திட்டமிட்டோ எப்படியோ நாம் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவரின் தனியறைக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, அதுவும் அவரில்லாத நேரத்தில். என்ன செய்வோம்? நமக்கும் இருக்கும் துப்பறியும் சாம்பு வெளிவரும் நேரம் அதுவாகத்தான் இருக்கும். அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடுவோம் அல்லவா? உண்மையில் நாம் அங்கு பார்ப்பது அங்கே பரவியியிருக்கும் பொருட்களையல்ல, நாம் பார்ப்பது நமது உள்மனம் அங்கே அந்த பொருட்கள் தரும் தடயங்களை வைத்து அவரைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருக்கும் பிம்பத்தைத்தான்.
என்னைப்பத்து நானே சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன் என்று ஆரம்பித்து யாராவது எப்போதும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதை நம்புவதற்குத்தான் யாரும் இல்லை. அவற்றை நம்ப வேண்டும் என்று முயற்சி செய்தாலும் முடிவதில்லை. அவரைப்பற்றி நமக்கும் உருவாகும் பிம்பம், அவரை பார்த்தும் அவரைப்பற்றி கேள்விப்பட்டதும் தான் இருக்கும்
காரணம், சொற்களால் உருவாகும் பிம்மத்தை விட காட்சியால் உருவாகும் பிம்பம் எப்போதும் பலம் வாய்ந்தது. இரண்டாவது மனம் ஒரு வேட்டை மிருகம் போல, அது தானாக எடுத்துக்கொள்ளும் தகவல்கள் உருவாக்கும் தாக்கத்தை, அதற்கு கொடுக்கப்படும் தகவல்கள் உருவாக்க முடியாது. எனவே தான் அவர் தன்னைப் பற்றி சொல்வதைவிட அவரைப் பற்றி நாம் பார்ப்பதே அவரை உருவாக்குகிறது
சரி, அவர் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், ஆனால் உங்களைப் பற்றி? உங்களைப் பற்றி உலகம் எப்படி கருத்து உருவாக்குகிறது? உங்களைப் பற்றி சொல்லச்சொன்னால் நீங்கள் சொல்லவிருப்பது என்ன? அதைத் தான் உங்கள்ச் சுற்றியிருப்பவர்கள் இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? இல்லையென்றால், அது அவர்கள் தவறு இல்லை.