Unordered List

10 அக்டோபர் 2024

வேட்டையனும் ஜெயிலரும்

நான் பொதுவாகவே non-fiction புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் உடையவன், fictionம் வாசிப்பதுண்டு. இரண்டுமே ஒவ்வொரு வகையில் நமக்குத் தேவை.

சினிமாவிலும் கதைசொல்லிகளும் இருக்கிறார்கள், கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சினிமா என்பது கதைசொல்லிகளுக்கான மீடியம். சமீபத்தில் வந்த லப்பர் பந்து நமக்கு பிடிப்பதற்குக்காரணம் அதில் அரசியல் தான் மையம் என்றாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதால் தான்.

சமீபத்திய ரஜினி படங்களில் ஜெயிலர் மிக பெரிய ஹிட் அடித்தற்குக் காரணம் நெல்சன் என்ற கதைசொல்லி உருவாக்கிய பாத்திரங்கள், அந்த கதை சொல்லல். சமீப காலங்களில் உருவான இயக்குனர்களில் முதன்மையானவர் நெல்சன். ஒருவேளை தமிழில் TopGun Maveric, john wick, breaking bad போன்ற படைப்புகள் வரவேண்டுமென்றால் நெல்சன் போன்றவர்களால் தான் அது வரமுடியும்.

இப்போது வேட்டையன் ட்ரைலர் பார்த்தபோது அந்தப் படத்தின் மீது எந்த ஆர்வமும் உருவாகவில்லை, மெதுவா பார்க்கலாம், அல்லது சாய்ஸில் விடலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று காலையில் ஆபீஸ் போனதுமே காலையில் மீட்டிங்கில் என் பாஸ் கேட்ட முதல் கேள்வி இங்கே என்ன பண்ணிட்டு இருக்க, படம் பார்க்க போகலையா என தான். பின்னர் பல நண்பர்கள் படம் எப்படி இருக்கு என கேட்க இன்னும் பார்க்கலை என்று சொல்லி சமாளித்து வந்த்தேன் 🙂



இப்பொது சில நல்லா இருக்கு பல கமெண்ட் பார்க்க மகிழ்சிதான். ஆனால் "ஜெயிலர் விட பெட்டர்" என பகீர் கமெண்டை தடாலடியாக சில ரஜினி ரசிகர்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு வகை படங்கள். உங்களுக்கு இந்த வகை படங்கள் பிடிக்கும் என்றால் நல்லது, ஆனால் இது பிடிக்கும் என்பதற்காக ஜெயிலரைக் குறைப்பது தான் தவறான விஷயம். ரஜினி ரசிகர்கள் அதைச் செய்யக்கூடாது, மீடியா உருவாக்கும் இந்த trapல் மறந்தும் கால் வைக்கக்கூடாது.

நமது ரசனை நமக்காக இருக்கும்வரை தான் நாம் கலைக்காக செலவளிக்கும் நேரம் அர்த்தமுடையது

06 அக்டோபர் 2024

லப்பர் பந்து

பல நண்பர்கள் ரெகெமெண்ட் செய்து நேற்று தியேட்டரில் லப்பர் பந்து படம் பார்த்தேன். தியேட்டரில் நேற்று முழு கூட்டம், நான் பார்த்த தியேட்டரில் இரண்டாம் பகுதியில் மக்கள் ஆர்வமான சிரித்து கைதட்டி பார்த்தது உணர முடிந்தது.

படம் நல்லா இருக்கு என சொல்லும்/எழுதும் பலரும், இதில் கெத்து (தினேஷ்) கேரக்டர் தான் சிறப்பு, அவர் தான் ஹீரோ என சொல்வதை கவனிக்க முடிகிறது. ஆனால் அது மையம் இல்லை என்றே நினைக்கிறேன். வெங்கட் பிரபு ஸ்டைலில் theatre momentகளை ரசித்து நல்ல படம் என்று சொல்லும் ஒரு ரசனை உருவாகிவருவதன் விளைவு இது. இதில் விஜயகாந்த், கெத்து எல்லாமே சின்ன சுவாரஸ்யங்கள், தியேட்டர் மொமெண்டுகள் அவை படத்தை சுவாயஸ்படுத்துகின்றன அவ்வளவு தான்.

உதாரணமா விஜயகாந்த் இல்லாமல் அந்த இடத்தில் இன்னொரு நடிகர், உதாரணாமா முரளியோ வைத்திருந்தாலும் கேரக்டரிலோ அல்லது வசனத்திலோ கூட பெரிய மாற்றம் வந்திருக்காது.

சிஎஸ்கே ரெபெரென்ஸ் மற்றும் விஜயகாந்த் ரெபரென்ஸ் இரண்டுமே GOAT படம் விட இதில் இன்னும் கொஞ்சம் கவனிப்பட்டது. எங்கள் ஊரில் நானென்னால் ரஜினி ரசிகராக இருந்த பள்ளி காலத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் அவரை அண்ணன் என்ற இடத்தில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு படத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் காட்டப்பட்டது மகிழ்ச்சி தான் ஆனால்,

விஜயகாந்த் ரசிகர் என சொல்லப்படுகிறது/காட்டப்படுகிறதே தவிர அந்த கேரக்டரில் விஜயகாந்தை பார்க்கமுடியவில்லை, ரஜினி ரசிகர்கள் கேரக்டரிலேயே ரஜினி பெர்சனாலிட்டி இருக்கும். அது போல சிலரைப் பார்த்ததுமே ரஜினி, விஜயகாந்த் அல்லது கமல் ரசிகர்கள் என கூட சொல்ல முடியும். இந்தப் படத்தில் அப்படி இல்லை.




அன்பு என்றெ கேரக்டர் என்ன செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை மற்றும் அரசியல். திரைக்கதையாகவும் அது அன்பு என்ன செய்கிறான் என்பதில் ஆரம்பித்து, அதில் தான் முடிகிறது. மிக நேரடியாக. படம் நல்லா இருக்கிறது என பாராட்டுவதோ, அல்லது விவாதத்துக்குறியது விமர்சிப்பததோ இதில் தான் இருக்கவேண்டும்.
அன்பு விட கெத்து கேரக்டர் மேல் கவனம் என்பது இந்த படம் சொல்லும் அரசியலை பார்க்கத் தயங்குவது/மறுப்பது தான்.