அவனைச் சொல்ல ஏதுமில்லை, நான் தான் நேரம்கெட்ட நேரத்தில் போய் நின்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் பார்த்தேன். எந்தக் கடைக்குச் சென்றாலும் கடைக்காரர் கேட்கும் முன் நாமாகக் கேட்கக்கூடாது என்பது நமது கொள்கை.
"என்ன சார்.. "
"ஒரு அரைக் கிலோ.." தொங்கிக் கொண்டிருந்த ஆட்டுத் தொடையைப் பார்த்தபடியே சொன்னேன். மதியம் மூன்றுமணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை தொந்தரவு செய்கிறோமே என்று கொஞ்சம் குற்றஉணர்வு. அவனும் நிமிர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காலைப் பார்த்தான். என்னை பார்த்தவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
தொங்கிக்கொண்டிருந்த ஆட்டுத் தொடையின் ஒரு பாகத்தைத் தான் அவன் காலையில் சமைத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறானோ என நினைத்தேன். ஒரே ஆட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வீடுகளில் உணவாக, ஒரு பகுதி மட்டும் அதே இடத்திலேயே உணவாகிறது. இதுதான் பகிர்ந்துண்டு வாழ்வது இல்லையா.
ஆனால் அவன் அமர்ந்திருந்த நிலையில், அவனது முகத்தைத்தான் பார்க்கமுடிந்ததே தவிர அவன் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பதை என்னால் பார்க்கமுடியவில்லை என்பதால் எனது ஊகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த இடத்தில குறிப்பிடவேண்டியிருக்கிறது.
ஆனால் அவன் அமர்ந்திருந்த நிலையில், அவனது முகத்தைத்தான் பார்க்கமுடிந்ததே தவிர அவன் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பதை என்னால் பார்க்கமுடியவில்லை என்பதால் எனது ஊகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த இடத்தில குறிப்பிடவேண்டியிருக்கிறது.
எனக்கும் எந்த அவசரமும் இருக்கவில்லை. சாப்பிட்டுவிட்டே வரட்டும். அவன் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால், இந்த மட்டன் சுவையாக இருக்கிறது என்று தானே அர்த்தம். எனவே நல்லது தான். உண்மையில் அவன் என்னைப் பார்த்தவுடனேயே தன் உணவை நிறுத்தியிருந்தால் தான் நான் யோசிக்கவேண்டியதாக இருந்திருக்கும். அவனே சாப்பிடமுடியாத அந்த ஆட்டுத் தொடையை நான் வாங்கிபோய் என்ன செய்வது?
ஆனால் தான் சாப்பிடும்பொழுது வரும் வாடிக்கையாளர்களை கவனிக்கவாவது ஒரு அப்ரசண்டீசை அவன் நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே,
"டேய்.." என ஒரு பலமான குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து இவனைவிட சற்று இளையவனாக இன்னொருவன் வந்து நின்றான்.
உள்ளிருந்து இவனைவிட சற்று இளையவனாக இன்னொருவன் வந்து நின்றான்.
ஓகோ உள்ளே ஆளை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு நேரம் இருந்தானா? இவன் சாப்பாட்டைத் தொடரப் போகிறான், வந்தவன் எனக்கு வெட்டித் தரப்போகிறான் என்று நினைத்தேன். அப்படியே நடந்திருந்தால் எனக்கு எந்தக் குழப்பமுமில்லாமலிருந்திருக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லையே..
ஆமாம் அங்கு நடந்ததோ வேறு..
அவன் வந்ததும் இவன் சட்டென எழுந்து கையைக் கழுவிவிட்டு, ஆட்டுத் தொடையை வெட்ட ஆரம்பித்தான். அவன்..