Unordered List

30 மார்ச் 2015

நம்புவது போல ஒரு கொடூர விபத்து

தரையிலிருந்து மேலேறி பறக்கும்வரை கேப்டனின் பொறுப்பில் தான்  இருந்திருக்கிறது. சீராக சீறிப் பய்ந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கையில்  கட்டுப்பாடு உதவி கேப்டனின் கைக்குச் சென்று விட்டது.

இந்த சமயத்தில் தான் அந்த உதவி கேப்டன் வேலையைக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள்.ஏற்கனவே பல மன சம்பந்தமான பிரச்சனைகளை கொண்ட அந்த உதவி கேப்டன் தானும் சேர்ந்துதான் வீழப் போகிறோம் என்று தெரிந்தும் நோஸ் டைவ் செய்து விட்டார் எனச் சொல்கிறார்கள். அதை கவனித்த கேப்டன் வெளியிலிருந்து கதறியும் பலனில்லை என்கிறார்கள். உதவி கேப்டன் செய்த நோஸ் டைவ் வேலையால், திறமை வாய்ந்த கேப்டனாலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விட்டது.

அந்த உதவிக் கேப்டன் அவர் பலமுறை தனது மன சம்பந்தமான பிரச்சனைகளுக்குகாக கண்டிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.  பலர் நம்பியிருக்கும் ஒரு பணியில் இப்படிப்பட்டவரை அமர்த்தலாமா என உலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. என செய்வது நடந்த இழப்பு இழப்பு தான்.

என்ன கதை இது  என்று கேட்கிறீர்கள் தானே, 

இது தான் கடந்த வாரம் பிரான்சில் நடந்த விமான விபத்தின் பின்னணி. அந்த கேப்டனின் பெயர் 
Patrick Sondheimer, உதவி கேப்டனின் பெயர்  Andreas Lubitz, நடந்தது ஜெர்மன்விங்க்ஸ் விமானத்தில். என்னதான் ப்ளாக் பாக்ஸ் ஆதாரங்கள் வந்தாலும், நம்புவது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.  இப்படி இவன் செய்வானா என. 

அப்படிஎன்றால் இன்னொரு வபத்தைப் பற்றிச் சொல்கிறேன்.. அது கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்த விபத்து தான். கேப்டன் பெயர் தோணி, உதவி கேப்டன் பெயர் விராட் கோலி. நடந்த இடம் சிட்னி. இப்போது இந்த கதையை மறுபடி வாசித்துப் பாருங்கள்.  கண்டிப்பாக நம்பவது மாதிரி இருக்கும். 

2 comments:

ஆஹா ஆஹா நம்பும் படியாகத்தான் இருக்கிறது.!
ஹ ஹ ஹா.

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன? தொடர்பு- என் தொடர்பற்ற விடயங்களை முடிச்சுப் போடும் போது கூறுவார்கள்.
அதையும் இதையும் எப்படி சாமி! உங்களால இப்படியெல்லாம்....

கருத்துரையிடுக