Unordered List

22 ஜூன் 2011

ரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்!

ஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை காப்பியடித்த ஒரு ஆங்கிலப் படம் நமது கவனத்திற்கு வந்துள்ளது.

தமிழ் படத்தை காப்பியடித்த அந்த ஆங்கிலப் படம் இதுதான். A History of Voilence (http://en.wikipedia.org/wiki/A_History_of_Violence_(film)).

இது நமது பாட்சா படத்தின் அப்பட்டமான காப்பி. உலகப் புகழ் பெற்ற "உள்ளே போ" காட்சிகூட அப்படியே உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :)இந்தக் கதையைக் கேளுங்கள்..

ஒருஊரில் ஒருவன் அமைதியாக ஒரு ஹோட்டல் நடத்திவருகிறான். பாட்சவில் ஆட்டோ..

அப்போது சில ரௌடிகள் வம்பிழுக்க அமைதியாக இருக்கிறான். பின் வேறு வழியின்றி அவர்களை அடிக்கிறான். முதல் பிரச்சனை..

பின்னே என்ன? ரௌடிகள் அவன் வீட்டின்முன்னே வருகிறார்கள். அவர்கள் கடத்தி வருவது அவனது மகனை. (பாட்சாவில் தங்கச்சியை) அவனை வைத்து மிரட்டுகிறார்கள். ஹீரோ அங்கு வருகிறார். ஹீரோவின் மனைவியும் பையனும் வில்லன்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அப்போது ஹீரோவின் பார்வையில்
ஒரு மாற்றம்..

பிறகு என்ன? அதே தான்.. "உள்ளே போ!!".

நம்பமுடியாமல் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்க ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்..

இப்படிப் போகிறது இந்தப் படம்.

பாட்சா வந்தது 1995 -இல், இந்தப் படம் வந்தது 2005 இல்.

தலைவர் படத்தை இப்படி காப்பியடித்து வைத்திருக்கிறார்களே இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையா?

யாராவது இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?

--------

இது இப்படி இருக்க இப்போது வந்துள்ள "KUNG FU PANDA 2" கூட ரஜினி படத்தின் காப்பி என்பதுதான் இப்போதுள்ள பரபரப்பான பேச்சு.

இது எந்த ரஜினி படம் என்று நான் சொல்லப்போவதில்லை. நீங்களே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்

இந்தக் கதை என்னவென்றால்..

ஊரில் பன்ச் டைலாக் பேசிக்கொண்டு ஜாலியாக திரியும் ஹீரோவுக்கு திடீரென தன்னை வளர்த்தது தன் உண்மையான அப்பா இல்லை என்று தெரிகிறது. எனவே அவனது உண்மையான பெற்றோர் யாருன்று தேட ஆரம்பிக்கிறார்.

அப்போது பக்கத்து ஊரில் பிரச்சனை செய்யும் வில்லனைப் பார்க்கிறார். அந்த வில்லன்தான் ஹீரோ அவரது பெற்றோரைப் பிரிய காரணமானவர். சட்டென பிளாஷ்பாக் அவருக்கு ஞாபகம் வருகிறது..

பிறகென்ன.. பழிக்குப் பழி..

இடையிடையில் ஆன்மீக தத்துவ வசனங்கள், வில்லன் எரியும் வெடிகுண்டை கையில் பிடித்து மறுபடி வில்லன் மீதே எறியும் காட்சிகள் என ஒரே பரபரப்புதான்
இது என்னபடம் என்று யோசித்தால் பல ரஜினி படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டுகிறது.

எனக்குத் தெரிந்து ரஜினி இதுபோன்ற கதையில் ஒரு பத்து படத்திலாவது நடித்திருப்பார் என நினைக்கிறேன்.

உங்களுக்கு எந்தனை படங்கள் ஞாபகம் வருகிறது?

--

இதன் மூலம் நாம் சொல்லவருவது என்னவென்றால்,எத்தனை பேர் காப்பியடித்தாலும் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை ஹாலிவூட்-க்கும் சொல்லிக்கொள்கிறோம். :)

12 comments:

அருணாச்சலம் படம் அப்படியே ஒரு ஆங்கிலப்படத்தை காப்பி பண்ணியது

எந்திரன் படம் கூட பல ஆங்கில படங்களின் கலவை அந்தக் கதை ஒரு தமிழ் சிறுகதையில் சுட்டது

ரஜனி மோகம் கண்ணை மறைக்குது

இந்த 'History of Silence' படத்தை தெலுங்கில் ஜெகபதிபாபு நடித்து 'காயம் 2' என்ற பெயரில் எடுத்தனர். 'காயம் 1' ராம்கோபால் வர்மா இயக்கியது.

உள்ளே போ வசனம் கூட காப்பின்னா ஹிஹி கடுமையாக கண்டிக்க வேண்டியதே

அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறது..

@பெயரில்லா
அருணாசலம் கதை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த மேட்டர் தானே.. தமிழ் படம்போல ஆங்கிலப் எடுப்பது தானே புது மேட்டர்..

@N.H.பிரசாத்
கருத்துக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி!!

@ஆர்.கே.சதீஷ்குமார்
அது தான் சார் இந்த விழிப்பணர்வு பதிவு.. ஹி ஹி :)

@பாலா
ஆமாங்க சார்.. நாம தானே இதுக்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டியதாக இருக்கு. :)

who am i கமலின் வெற்றி விழா பார்த்து எடுத்தது.
the world is not enough கமலின் விக்ரம் பார்த்து எடுத்தது.
அடங்கு தம்பி அடங்கு.

@ MANASAALI

அண்ணே வெற்றி விழா borne identityயை ஆட்டைய போட்டது. விக்ரம் அதற்கு முன் வந்த பல ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஆட்டைய போட்டது. நீங்க அடங்குங்க...

intha padathai naan irandu varungalukku munbae parthaen it is very similar to thalaivar's batcha
the movie got good review in imdb
http://www.imdb.com/title/tt0399146/

நீங்கள சொன்னது சரிதான். விக்கிபீடியாவில் கதையைப் படித்தவுடன் தெரிந்தது..... சர்வ நிச்சயமான பாட்சாதான்....

The story appears to be based on a 1955 episode of Suspense titled "Nobody Ever Quits."

If you follow the links in wiki you can see this link below

http://en.wikipedia.org/wiki/A_History_of_Violence_%28novel%29

Santhose

கருத்துரையிடுக