Unordered List

15 ஏப்ரல் 2011

அந்தப் பாம்பு

ஓடிக் கொண்டிருந்தேன்.

மிக வேகமாக,

வெகு வெறியுடன்,

என்னைக் கடித்துவிட்டு ஓடிய பாம்பை தேடிக்கொண்டிருந்தேன்.



அதன் ஒவ்வொரு அடையாளமும் எனக்கு ஞாபகம் இருந்தது.


கண்டிப்பாக தப்பவிடகூடாது எனத்

தேடியபடியே ஓடிக்கொண்டிருந்தேன்.




அப்போது கேட்டேன் அந்தச் சத்தத்தை.


பல குரல்கள், அதே அடையாளங்களை கூவியபடி

அவர்களுக்குமுன் அதை நான் கண்டுபிடிக்கவேண்டுமெனத்

தேடியபடியே ஓடிக்கொண்டிருந்தேன்



அப்போதுதான் கவனித்தேன் என்னை


அதே அடையாளங்களோடு

ஒரு பாம்பு.




ஓடிக் கொண்டிருந்தேன்.


மிக வேகமாக.