கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றொரு முக்கிய தினம். உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான சச்சின் அடித்துள்ள நூறாவது சதம் இன்று. சச்சின் விளையாடும் எந்தொரு நாளுமே கொண்டாட்டம் தான் என்றாலும், இந்த நூறு இந்தக் கொண்டாட்டத்தை அதிகப் படுத்தும் ஒரு தருணம்.
சாதகமான காலம் மற்றும் சோதனையான காலம், இரண்டிலுமே அவர் காட்டிய சமநிலை எல்லாத் துறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பாகும். விளையாட்டுத் திறமை மட்டுமலாமல், தனது குணநலன்கள் மூலம் சமகாலதின் மிகச் சிறந்த ஆளுமையாக சச்சின் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
வாழ்த்துகள் சச்சின்..
சாதனைகளால் மகிழ்ச்சி பரவட்டும். பரவும் மகிழ்ச்சியால் சாதனைகள் பெருகட்டும்..