டெக்னிகலாக நல்ல கேமரா அங்கிள், சிறப்பான நடிப்பு, செம எடிட்டிங் பரபரப்பா போகுது படம் எனவே இது மிக நல்ல படம் என்றார் நண்பர். அந்தப் படம் இப்படி போகிறது
இந்தப் பட ஹீரோ ஒரு இயக்குனர், குழந்தையை வெட்டிக்கொல்வதைப் எப்படி டீடெய்லாக படமாக்குவது என்று கனவுகாண்பவர், அந்தக் கனவில் கூட குழந்தையை வெட்டும்போது அதில் ரத்தம் வடியவில்லையே என வருத்தம் கொள்பவர். நிறைய வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் படித்து தன் மனதில் உருவாக்கிக்கொண்ட இந்தக் கருவில் படம் எடுக்கும் லட்சியத்துக்காக, தன் மாமாவால் மிக எளிதில் வாங்கிக்கொடுக்கமுடிந்த போலீஸ் வேலைக்குச் செல்லாமல்...