சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் பத்திரிக்கைகள் எலான் மஸ்க் ஏன் ஒரு தோல்வியாளராக இருக்கிறார் என கட்டுரைகள் எழுதின. அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தன. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை, அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களை டீல் செய்தவிதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
”நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா?”.
”நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா?”.
சென்றவாரத்தில் பத்திரிக்கைகளில் மீண்டும் ஒரு பூகம்பம். புகை பிடிக்கும் இவரிடமா கார் வாங்குவீர்கள் என அவர் மீதான எதிர்ப்புப் பிரச்சாரம் சூடு பிடித்தது.
பத்திரிக்கைகளின் எதிர்ப்புப் பிரச்சாரம் |
நடுநிலையாளர்களும் பத்திரிக்கைகளும் நல்லவர்கள் தான், நல்லது என நினைப்பதைத்தான் சொல்கிறார்கள், ஆனால் என்ன பிரச்சனை என்றால், அவர்கள் எதிரி என நினைப்பவர்களை நாமும் எதிரியாக நினைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள், இல்லை என்றால் நமக்கும் முத்திரையைக் குத்திவிடுவர். ஆனால் இந்த போலி தார்மீகக் கோபம் பெரும்பாலும் எதிர்மறை சக்தியாகவே இருப்பதையும் கவனிக்க முடியும்.
கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் நேற்றைய launch, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தின் ஒரு பெரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை நேற்று வெற்றிகரமான விண்ணில் செலுத்தியுள்ள்ளது SpaceX.
சீறிப்பாய்ந்த Falcon 9 |
இவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள. ஒரு நிகழ்ச்சி.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி. SpaceXன் சாதனையான Falcon heavy என்ற ராக்கெட்டை உலகத்துக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதன் திறனை மக்களுக்குக் காட்டவேண்டும். இதற்கு பல தரவுகள் கொடுத்திருக்கலாம். ஆனால் இவர் செய்தது யாரும் யோசிக்க முடியாதது. தனது இன்னொரு சாதனையான டெஸ்லா காரை அந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பினார். அதிலும் அந்தக் காரில் தான் விரும்பிப் படித்த, தனது கனவுக் உருவாகக் காரணமாக ஐசாக் ஹசிமோ கதைகளை வைத்து அனுப்பினார். சாதனையாளர்களை இயக்குவது கனவுகளே என உலகுக்குக் காட்டினார்.
விண்ணுக்குப் பறந்த கனவு: ஐசாக் ஹசிமோ கதைகள் |
பெட்ரோல் விலை உயர்வு நம்மை பாதித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது ஊடகங்களும் அறிவிஜீவிகளும் இதையும் தங்கள் வழக்கமான (மோடி ஆதரவு.எதிர்ப்பு) அரசியல் நிலையைத்தாண்டி யோசிக்க முடியாமல் அதே அரசியலில் உழன்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற கனவுகளும் சாதனைகள் நம் நம்பிக்கையை மீட்கின்றன.
பெட்ரோலியம் என்பது தீரக்கூடிய எரிபொருள் உலகைக்காப்பாற வேண்டுமானால் இதிலிருந்து மீள பெட்ரோலியம் இல்லாத காரை எல்லா வசதிகளுடம் கொண்டுவரவேண்டும் என்பது சில வருடங்களுக்கு முன் ஒருவரின் கனவு. எலெட்ரிக் கார் என்பது பொருட்காட்சியில் இருக்கும் விஷயம் என்ற நிலையை மாற்றி மார்கெட்டில் கடும் தேவை இருக்கும் விஷயமாக மாற்றி இருப்பது இந்த அரசியல் சரிகளில் மாட்டிக்கொள்ளாத கனவின் சாதனை.
உலகின் வளங்களுமே தீரக்கூடியவை தான், மனிதம் செழிக்கவேண்டுமானால் பூமியைத்தாண்டிச் செல்லும் சக்தி வேண்டும் என இன்னொரு கனவு. நேற்று நடந்திருக்கும் Falcon 9 வெற்றி அந்தக் கனவின் வழியில் இன்னொரு பாய்ச்சல்.
இவை அரசியலாளர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை, ஆனால் அந்தப் பிரச்சாரங்களுக்கு கனவுகளைத் தடுக்கும் சக்தியில்லை.