Unordered List

24 அக்டோபர் 2023

லியோ

லியோ படத்தின் கடைசி காட்சியில் சண்டை எல்லாம் முடிந்தபின், இங்கு நடந்தது வீட்டில் சொல்லிவிடவேண்டாம் என தனது மகனிடம் கேட்டுக்கொள்கிறார் பார்த்திபன், அப்படினா நான் சிகரெட் அடிப்பதை வீட்டில் சொல்லக்கூடாது என 18 வயது நிரம்பாத ஸ்கூல் படிக்கும் அவரது மகன் பார்த்திபனை நேராகப் பார்த்து தைரியமாகச் சொல்கிறான். மகன்கள் அப்பாவுக்கு பயப்படுவது அவரது செல்வத்தாலோ பலத்தாலோ அல்ல.


இது தகப்பனின் அவல நிலை, ஒரு கணத்த மவுனம் தியேட்டரில் இருந்திருக்கவேண்டும், ஆனால் தியேட்டரில் சிரிப்பலை, இங்கு இந்தப் படம் தோல்வியடைகிறது.

படத்தில் ஆரம்பக் காட்சியில் ஸ்கூலுக்கு மொபைல் கொண்டுபோவதையே கில்டி பீலிங்குடன் ப்ளீஸ் என கேட்கும் அந்த பள்ளி சிறுவன், கடைசியில் தான் சிகெரெட் குடிப்பேன் என அதே தகப்பனிடம் சொல்வதும், அதை கேட்கும் தகுதி உனக்கு இல்லை, அதோடு அம்மாவிடம் சொல்லாதே என சொல்வதும். அதை தட்டிக்கேட்கும் அற நிலையை ஹீரோ இழப்பதும் இந்த படத்தில் பயணத்தில் நிகழ்கிறது.


ஆனால் இந்த அவல நிலையை உணராமல் அப்பாவி ரசிகர்கள் கைதட்டுவது இந்தப் படம் சொல்லப்பட்டதில் இருக்கும் பிரச்சனையைக் காட்டுகிறது.

போதைமருந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன் இப்போது அதை எந்த விலைகொடுத்தாலும் மறைத்து குடும்பத்துடன் வாழ நினைப்பது ஒரு நல்ல லைன் தான், ஆனால் இந்தப் படம் அந்த போதை உலகத்தைக்காட்டும்போது அதை ஹீரோயிசமாகக் காட்டியதில் லாஜிக் மற்றும் அறம் இரண்டிலுமே தவறிழைக்கிறது.ஹீரோவுக்கு ஓபனிங் சாங் சண்டை இல்லாமல் தொடங்குவது நல்லது தான், ஆனால் அப்படி தொடங்கி, அவர் போதை வியாபாரத்தில் இருக்கும்போது "நான் ரெடி தான் வரவா" என பாடல் வைப்பது எவ்வளவு பெரிய அபத்தம். அங்கு அப்பாவிகளைக் கொல்வது போலீஸைக் கொல்வது எல்லாம் அநிருத்தின் பில்ட் அப் இசையோடு வருவது எல்லாம் லைன் மொத்தமான மிஸ் ஆகும் இடங்கள்.

இந்த பில்ட்-அப் பாட்டு பார்திபனுக்கு வைத்து, போதை கும்பல் வாழ்க்கையை ஒரு கில்டி பிண்ணனி போல வைத்திருந்தால் இந்தப் படம் இன்னுமே அறத்தை மீறாமலும் லாஜிக்லாகவும் இருந்திருக்கும்.

கதைப்படி லியோ என்பது ஹீரோ மறக்க நினைக்கும், அறுவருக்கும் கடந்தகாலம், அதுவும் இதே படத்தில் சொல்லபடுகிறது. எப்படி?

ட்ரெயிலரில் வந்த தே** வசனம் அதைத்தான் காட்டுகிறது, தனது கடந்தகால வெர்ஷனை உண்மைலேயே வெறுக்கிறான் பார்த்திபன். அது பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருந்தால் கடைசிக் காட்சியில் பள்ளிச்சிறுவன் சிகரெட் அடிப்பேன் என்றுசொல்லும்போது அதன் தீவிரம் கடத்தப்பட்டுருக்கும்.

குற்றவாழ்க்கையை தவறெனெத்தெரியாமல் உள்ளே இருபவர்கள், ஏதோ ஒரு கணத்தில் ஒரு நிகழ்வில் இதுவரை தான் காணத்தவறிய அதன் பாதிப்பைப் பற்றி, தெரிந்து அந்த குற்ரத்தில் இருந்து வெளியே வருவது என்பது ஒரு இயல்பான விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல்,

குற்றப்பிண்னனியை, கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடுவது அங்கு பில்டப் காட்சிகளிளும், இசையும் நரேஷனை நேரெதிராகக் கொண்டுசெல்கின்றன. கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடிக் கொழுத்தும் லியோ அதன் கொடுமை பற்றி எந்த நிகழ்வும் இல்லாமல், தன் குடும்ப பூசல்களால் வெளிவருவதுபோல காட்டினால், நாளை அவர் காஷ்மீரில் கஞ்சா வியாபாரம் ஆரம்பிக்கமாட்டாரா என்ற மாதிரி இந்த நரேஷன் கொண்டு செல்வது தான் பிரச்சனை

செம ஸ்மார்ட்டான விஜய், டெக்னிகலான சண்டைகள் எல்லாம் இருந்தும் இது கனெக்ட் ஆகாதது இதனால் தான்.

தான் மறக்க நினைக்கும் போதைஉலக பிண்ணனிக்கு தன் பள்ளியில் படிக்கும் மகன் சிகரெட் மூலம் செல்வதை தடுக்க பார்க்கும் கையறு நிலையில் இருக்கும் பார்த்திபனின் கதை இது.

இந்தப் படத்தின் தலைப்பு லியோ என்று சொன்னபோதே. இது லியோ அல்ல பார்திபன் என திரும்ப எழுதப்பட்டிருக்க வேண்டும்.