சென்னை, போரூர் சிக்னல். 3 டிசம்பர் 2015
"டேய் **.. என்னடா வண்டிய ஓட்டுற” என்று அவன் சொன்னதுதான் தாமதம்
“யேய்..” என்று ஒரு இருபது குரல்கள் அவனை அடக்கின. இதை எதிர்பார்க்காத அந்த குடிமகன் இடம் விட்டு அகன்றான். ஓட்டுனர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதுபோன்ற அர்ச்சனைகளை ரோட்டோர குடிமகன்களிடமிருந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பெறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் ஓட்டுனருக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பது புதிது.
போரூருக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனது ஹன்க் பைக்கில் பயணத்தைத் தொடங்கினேன். எனக்குப் பிடிக்காத ஆற்காடு சாலை தவிர்த்து...