2015 வருடம் அப்போது இந்திய க்ரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு சின்ன சோதனைக் காலம், அதைப்பற்றி அப்போது பவுலராக இருந்த் அஸ்வினிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஒரு போரில் தலைவன் பின் தான் வீரர்கள் நிற்கவேண்டும், என் தலைவர் சொன்னால், நான் களத்தில் உயிரைக்கொடுக்கத்தயார் என்றார்"
அப்போது சில அதிர்வலைகளை உருவாக்கிய பேட்டி அது. நன்றாக கவனித்தால் தோனி எந்த அளவு ஜூனியர் வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்பதை இது காட்டுகிறது.
இது இப்படியென்றால சிஎஸ்கே அணி அமைக்கப்பட்டபோது அப்போது ஜூனியராக இருந்த ரவீந்திர ஜடேஜா பெரும் விலைக்கு வாங்க்கப்பட்டது பல புருவங்களை உயர்த்தச் செய்தது. அப்போது அவர் "சர் ஜடேஜா" என அன்பு கடந்த கிண்டலுடன் அழைப்பட்ட காலம். ஒரு கிசுகிசுவாக இருந்த அந்தப் பட்டப் பெயரை அப்போது கேப்டனாக இருந்த தோனி பேட்டிகளிலும் டிவிட்டரிலும் பேசி ஜடேஜாவை நம்ம வீட்டுப்பையன் என்று நினைக்க வைத்தார்.
இதை விட முத்தாய்ப்பாக தனக்கு அடுத்த கேப்டனையும் உருவாக்கினார் தோனி, ஒரு மேட்சில் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தால் ஜெயிக்கும் நிலைக்கு வர, அந்த ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி நினைத்திருந்தால் வின்னிங் ஷாட் அடித்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைத்து கோலிக்கு வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது சும்மா இல்லை, கோலிக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நினைத்துதான் கொடுத்தார்.
அப்படி தோனியால் கைகாட்டப்பட்ட கோலி எங்கே ஒரு கேப்டனாக வெற்றி பெறமுடியவில்லை? முன் சொன்ன சம்பவங்களை மறுபடி யோசியுங்கள் கோலி கேப்டனான பின் எத்தனை ஜூனியர் வீரர்கள் கோலிக்காக "உயிரைக்கொடுக்க" தயாராக இருக்கிறார்கள்.
அப்படியென்றால் தோனியால் கைகாட்டப்பட்ட கோலி தகுதி இல்லாதவரா? இந்தக் கேள்விக்கு பதில் தேடும்முன் இந்திய க்ரிக்கெட் போர்டில் மாநிலங்களின் ஆதிக்கத்தை மனதில் வைக்கவேண்டும். இந்திய க்ரிக்கெட் போர்டில் மூன்று மாநிலங்கள் தான் பெரிய அளவில் சக்தியானவை மும்பை, கர்நாடகா அடுத்து சென்னை. விளையாடும் 11 பேரில் சில காலகட்டங்களில் இந்த மாநில வீரர்கள் நான்கு,ஐந்துபேர் என இடம் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய காலங்கள் உண்டு.
இந்த மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வந்து கேப்டனாக ஜெயிக்க பெரும் வல்லமையும் கரிஷ்மாவும் வேண்டும். கபில்தேவ்,கங்குலியில் இருந்து தோனி வரை அப்படிப்பட்ட போர் வீரர்கள் தான். அந்த வழியில் கோலி கேப்டனானதும் தனது அந்த அசாத்திய திறமை மற்றும் போர்குணத்தால் தான். தோனி தனது தொடர்ச்சியாக கோலியை நினைத்ததும் இந்தக் காரணத்தால் தான்.
ஆனால் கோலியின் போர்க்குணம் எங்கே குறி தவறியது என்பது தான் பிரச்சனையாக ஆகிறது. கபில்தேவ் சச்சின் போன்றவர்கள் சின்ன டீம்களுடம் விளையாடும் போது மிக நட்பாக இருப்பதை கவனிக்கமுடியும். ஆனால் பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்துபோன்ற சவால்களின்போது மிக கடுமையாக போராடுவதை கவனிக்கமுடியும். கேப்டன் கூல் எனப்படும் தோனி கூட பாகிஸ்தான்/ஆஸ்திரேலியா போட்டிகளில் அதிக ஆக்ரோஷம் காட்டுவதை கவனிக்கமுடியும்.
ஆனால் ஐபில் போன்ற போட்டிகளில் கூட பொங்கும் கோலி சமீப பாகிஸ்தான் போட்டியின் தோற்றதையும் அதை மிக ஜாலியாக எடுத்துக்கொண்டதும் மக்களால் ரசிக்கப்படாது என்பதை அவர் உணரவில்லை என்று படுகிறது. நீ அவ்வளவு நல்லவன்(கூல்) இல்லையே என கிண்டலடிக்கப்ப்ட்டது. தற்போது மீடியாவில் இருக்கும் அரசியல் சரிநிலைக்காக தன் க்ரிக்கெட் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுத்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டார். முக்கிய போட்டிகளில் சச்சின் கபில் போன்றவர்கள் தோற்றால் அவர்கள் சோக முகமே நமக்கு ஆறுதலாக அமையும் என்பதையும் கவனிக்கமுடியும்
தன் எதிரிகளை கையாள்வதிலும் இதே குறி தவறிய நிலை தான் கோலி எடுத்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் சரியாக விளையாடாத ரோஹித்துக்குப் பதில் ஏன் பார்மில் இருக்கும் இஷாத் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என கேள்வி கேட்கப்ப்பட்டபோது "அய்யோ ரோஹித்தை தொடுவதா என பதறினார்". சரியாக விளையாடாத ரஹானே, புஜாரா ஆகியோரை தொட பயப்படும் அவர், ஜூனியர் வீரர்களுக்கு தோனி செய்ததுபோன்ற அந்த நம்பிக்கையை அளிக்கவில்லை. அதுவே அவருக்கு பிரச்சனையானது.
கோலியின் வெற்றி சதவீதம் பழைய கேப்டன்களை விட நன்றாக இருக்கிறதே என்று சொல்பவர்கள் கடந்த பத்து வருடமாக இந்திய க்ரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் என்று சொல்லலாம். 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி மிக பரிதாபமான தோல்வியைடந்தது. கிட்டத்தட்ட க்ரிக்கெட் மீதே இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில் தான் கபில் ஆரம்பித்த ஐ,சி,ல் தொடர்ச்சியாக வந்த் ஐ,பி.ல் அந்த நிலையை மாற்றியது, இப்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. அந்த நிலையில் கேப்டனாக தோனியும் அப்போது வீழ்ந்திருந்த கேப்டன் என்பதன் பெருமையை மீட்டெடுக்க உதவினார்.
இப்போது இந்தியாவில் இருக்கும் திறமையான வீர்களைன் காரணமாக, சரியான அணி தேர்வு செய்தாலே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை தான் இருக்கின்றது. எனவே இயல்பாக வெற்றி சதவீதம் அதிகம் இருக்கும். ஆனால் அதிக கேப்டன்ஸி தேவைப்படும் ஐ.சி.சி தொடர்க்களை ஜெயிப்பதே இப்போது சவால். அதில் கோலி தொடர்து தோற்க முன்சொன்ன இரணடு காரணங்கள் தான் காரணமாக அமைகின்றன.
எனவே கோலி சாதாரண ஆள் இல்லை, தோனி கைகாட்டிய பவர்புல் துப்பாக்கி, ஆனால் ஒரு கேப்டனாக அது இலக்கின்றி எதிராளிகளை விட்டுவிட்டு எளியவர்களையும் தன்னை நம்பியிருப்போரையும் சுட்டு இலக்கில்லாத துப்பாக்கியானது தான் சோகம்.