எனக்கு ஒரு புதிய பயண அனுபவம் கிடைக்கும் போது, ஒரு அபுனைவு புத்தகம் என்னைக் கவரும்போது, ஒரு புதிய டெகானலிஜில் வேலை செய்து அதன் சாத்தியங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும்போது, ஒரு வரலாற்று அவதானிப்பை கண்டடையும்போது, அல்லது சென்னையில் ஒரு பெரு வெள்ளம் வரும்போது என நான் எழுத்தாளார் ஜெயமோகனோடு கடிதம், கட்டுரை அல்லது நேர் பேச்சில் தொடர்புகொண்ட சில தருணங்கள் நினைவில் இருக்கின்றன.
தமிழ் இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளரான அவரிடம் சம்பந்தம் சம்பந்தம் இல்லாத இந்த விஷயங்களை ஏன் உரையாடுகிறோம். ஏனென்றால் இவை அனைத்திலும் அவரால் உரையாட முடியும், பெரும்பாலன சமயங்களில் அதற்கு மேல் நுட்பத்தை ஒரு தொடர்பை அவரால் நமக்கு காட்ட முடியும்.
விஞ்ஞானிகள் என்ற பட்டத்தோடு உலகில் நிறையபேர் இருந்தாலும் நோபல் பரிசு பெருபவர்கள் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் அவர்களின் இந்த பல் துறை அறிமுகத்தை, ஒருதுறையில் அறிவு சாதனையை இன்னொரு துறையில் பொருத்திப்பார்க்கும் திறனைத்தா
ஜெயமோகனின் இந்த பன்முகத்தன்மையை, அவரது படைப்புகளை மட்டும் வாசிப்பவர்களும் அடையலாம். உதாரணமாக வெண்முரசு நாவல்களிலேயே இன்று வரை நடந்துள்ள அறிவியல் வரலாற்று சாதன்னைகளையும் காணலாம், உதாரணமாக, பீமனும் துரியனும் சண்டையிடும் இடத்தில் மெஷின் லேர்னின் கான்செட்ப் ஒத்து வருவது பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.
எழுத்தாளார் ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன என்று ஒன்றைக் கேட்டால் பலதுறை நுட்பமும் அதை தொகுத்து ஒரு ஸினர்ஜி உருவாக்கும் தன்மையும் என்று சொல்லலாம்