ஆறேழு வருடங்களுக்கு ஒரு அலுவலக மீட்டிங்கில் ஒரு உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட புத்தகம் Flashboys, அந்தப் பெயர் சட்டென கவர அதை குறித்துவைத்துக்கொண்டேன், அன்று மாலையே வாசிக்கத் தொடங்கினேன். நான் மொபைலில் கிண்டில் ஆப் வழியாக வாசித்த முதல் புத்தகமும் அது தான்.
Michael Lewis எழுதிய Flashboys அமெரிக்க பங்குச்சந்தையில் high frequency ட்ரேடிங் பற்றி ஒரு விரிவான சித்திரத்தை அளித்து அதன்பின், அந்த புதிய டெக்னானலஜியினால் மட்டுமே சாத்தியமாகிய ஒரு முறைகேடுபற்றி விளக்கி, அதற்கு காரணமான தொழிநுட்ப மற்றும் அரசியல் காரணங்களை நமக்கு காட்டி, பின்னர் அது எப்படி வெற்றிகரமாக வெல்லப்பட்டது என காட்டும் புத்தகம்.
ஷேர் மார்க்கெட் பற்றி உள் விவகாரங்கள் தெரியாத நமக்கே இதில் துல்லிய தகவல்கள் புரியும் படி இருந்தாலும், அது பாடம் நடத்துவதுபோல் இல்லாமல், அதை வாசிக்கும் அனுபவம் நாம் பார்க்கும் மாஸ் திரைப்படங்களுக்கு சற்றும் குறைவில்லாது. நான் கிண்டில் ஆப்பில் வாசித்ததால். வீட்டில், வெளியில், எலெக்ரிக் ட்ரெயில் என தொடர்ச்சியாக அதை வாசித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து michael lewis எனது மரியாதைகுரிய ஒரு எழுத்தாளராகிவிட்டார்.
வழக்கமாக ஒரு போர் நடந்தால், ஒரு தலைவர் உருவானால், ஒரு விளையாட்டுவீரர் பிரபலமடைந்தால் அதைப்பற்றிய புத்தகங்கள் வருவது இயல்பு, ஆனால் இங்கு தான் மைக்கேல் லூயிஸ் மாறுபடுகிறார்.
மைக்கேல் லூயிஸ் ஹீரோக்களை பற்றி எழுதுவதில்லை, அவர் எழுதுவதால் அவர்கள் ஹீரோக்களாகிறார்கள்.
அதாவது ஒரு பெரிய நிகழ்வு நடந்து அது உலத்தின் கண்களுக்கு தெரியாதபோது அதைப்பார்க்கும் சிறப்பு "கண்கள்" இவருக்கு இருக்கிறது என்பதே இவரைப்பற்றி சொல்ல்ப்படும் சிறப்பு
உதாரணமாக,
Flash boys - அமெரிக்க சந்தையின் high frequcy trading, அதில் உருவான ஹீரோ Brad Katsuyama
Big Short - 2008 சந்தை சரிவைப் பற்றியும் அதில் வென்றவர்களையும் காட்டியது. Michael Burry, Steve Eisman உட்பல சில ஹீரோகளை சுட்டிக்காட்டியது.
இப்படி ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு நிகழ்வு, அது நடந்த வரலாற்று சூழல், புறக்காரணிகள், அங்கு வென்ற மனிதர்கள் வென்றதற்கான காரணம் என மிக விரிவாக்வே காட்டும் ஸ்டைல் இவருடையது.
ஒரு புத்தகம் வாசித்தால் அதைப்பற்றி நண்பர்களிடம் பேசுவதை வழக்க்காமக் கொண்டிருபபதை என் நண்பர்கள் அறிவார்கள். இவரைப் பற்றி காளிபிரசாத்திடம் பல்வேறு தருணங்களில் பேசியிருபப்து நினைவுக்கு வருகிறது.
சரி இப்போ எதற்கு இவரைப் பற்றி பழைய கதை என்றால்,
ஹீரோக்களை உருவாக்கும் இவரது புத்தக வரிசையில் இந்த வருடம் வந்துள்ள புத்தகம், அவரது ஹீரோ இமேஜையே டேமேஜ் செய்யும் அள்வுக்கு விமர்சிக்கப்படுகிறது. அது இன்னொரு பதிவில்