Unordered List

07 அக்டோபர் 2023

வனவிலங்குகளும் ஹீரோயிசமும்

4 மனிதர்களையும், 20 கால்நடைகளையும் கொன்ற ஒரு புலியை என்ன செய்யலாம்?

அதை அடிச்சி கொன்னு கொலைபண்ணி... என ஒருவர் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சிலர் நினைத்துக்கொண்டிருந்தனர்.

ஒருமுறை ஒரு மனிதரைக் கொன்ற ஒற்றை யானையை பிடிக்க பழங்குடியினரிடம் வனத்துறை உதவிகேட்டபோது அதை அவர்கள் மறுத்துவிட்டனர், இந்த யானையின் இணையை வனத்துறை பிடித்ததே இந்த யானை கோபமடந்ததற்குக் காரணம் என அதன்மீது பழியுணர்ச்சி இல்லாமல் இருந்ததை Danny Naveh என்ற மானுடவியலாலர் பதிவு செய்திருக்கிறார்.



T23 புலியின் சம்பவம் தமிழ்நாட்டின் ஒரு திருப்புமுனை. இந்த விழுமியம் பொது சமூகத்தை அடைந்த இடம் இது.
வனவிலங்குகள் பாதுகாக்கப்ப்டவேண்டியவை. மனிதர்களின் தண்டனையை அவற்றுக்கு அளிக்கக்கூடாது, மனிதர்களைக் கொன்ற புலி என்றாலும் அதை பாதுகாப்பது சமுதாயமாக நமது கடமை என தமிழ்நாடு முன்னகர்ந்த இடம் அது. முன்பு பொதுவெளியில் இருந்த மதிபீடுகளை முன்னகர்த்திய பெருமையை இலக்கியம், பத்திரிகைகள், கலை, சோஷியல்மீடியா என அனைவரும் பகிர்ந்துகொள்ள உரிமை இருக்கிறது.


சரி, அப்படி ஒரு நேரத்தில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டால் தற்காத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமா என்றால், தற்காத்துக்கொள்ளலாம், ஆனால் wild life converation என்ற இன்றைய நிலையில் அது பெருமைக்குரிய விஷயம் அல்ல. வனவிலங்குகளைத் தாக்குவது பெருமைக்குரிய விஷயம் என்ற புள்ளியில் இருந்து நாம் முன்னேறி வந்துவிட்டிருக்கிறோம் என நம்புவதே நல்லது.

வனவிலங்கை தாக்கியது அல்ல, அதைக் காப்பாறியதே தமிழ்நாட்டின் ஹீரோயிசம்