Unordered List

07 அக்டோபர் 2023

ஸ்டார்களும், நல்ல ப்ளேயர்களும் - ரச்சின்

பெற்றோருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கனும். நியூஸிலந்துவீரர் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) முதல் போட்டியில் தனது திறமையால், தன் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு புகழ்வாங்கிக்கொடுத்திருகக்கிறார். அவரது பெயரின் மீது கவனம் குவிந்துள்ளது. ரவீந்திரா சரி அதென்ன ரச்சின்?


ராகுல் ட்ராவிட் + சச்சின் டெண்டுல்கர் = ரச்சின் ரவீந்திரா

சமீபத்திய உரையாடலில் ஒரு நண்பர், சச்சின் இருந்ததால் தான் ட்ராவிடுக்கு கிடைக்கவேண்டிய புகழ் வராமல் போனது கூறினார். சச்ச்னின் விளையாடுவதும் ட்ராவிட் விளையடுவதும் வெவ்வேறு பொஸிஸன் மற்றும் ஸ்டைல், எனவே நேரடி பாதிப்பு இல்லை. தோனி மாபெரும் ஆளுமையோடு இருந்ததால் தினேஷ் கார்த்திக் உட்பட பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தார்கள் என சொல்வதுபோல அல்ல அது.

இருந்தாலும் அப்போது இருந்த ஊடக வெளிச்சம் புகழ் எல்லாம் சச்சினுக்கு இருந்ததால் ட்ராவிடை யாரும் கவனிக்கவில்லை, அதிரடி சச்சின் சாதனைகள் பேசப்பட்ட அளவு நிதானமான ட்ராவிடின் என சொல்கிறார் என புரிந்துகொண்டேன், அவரைப்போல பலருக்கும் கருத்து இருக்கிறது. அது ஒரு நல்ல ஆர்கியூமெண்ட் தான்.

இந்த ரச்சினின் பெற்றோர்களும் இப்படி நினைத்திருபார்கள் போல. அவர்கள் சச்சின் மீதும் ட்ராவிட் மீதும் சம மரியாதை வைத்து தங்கள் மகனுக்கு இருவர் பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.



ஆனால் யார் ஒரு நாயகன் என்பது அந்தந்த கால ஊடக பரபரப்பு அதிகார விளையாட்டு. ஒருவரை மட்டும் புகழ்வதா இன்னொருவரையும் பாருங்க என நினைக்கும் ரசிகர்களின் கருணை எல்லாம் மீறி காலம் வைக்கும் ஒரு தேர்வு உண்டு.

அதில் சந்தேகம் இன்றி வெளிப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.

"Tendulkar Was Definitely The Idol" - Rachin

இந்த ரச்சினின் சமீபத்திய பேட்டியில், தான் வளரும்காலத்தில் தனது ஆதர்சமாக இருந்தது சச்சினே என சொல்கிறார். தனது பெற்றோர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இரண்டு பெயர்களையும் இணைத்து இருந்தாலும், தனது மனதில் இருக்கும் பெயர் சச்சின் என சொல்லியிருக்கிறார்.
நல்ல திறமையான ப்ளேயர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இருந்தாலும் அதில் ஒருவர் ஸ்டாராக எழுகிறார், அவரே அடுத்த தலைமுறையை இன்ஸ்பிரேஷன் செய்து முன்னேற காரணாமாகவும் அமைகிறார். அது சச்சின்.

இந்தே ரச்சின் ரவீந்திராவின் இன்றைய இன்ஸ்ப்ரேஷன் விராட் கோலி. 





https://www.icc-cricket.com/news/3723515