நெல்சனும் லோகேஷும் எடுக்கும் ஆக்ஷன் படங்கள் மலையாள திரையுலகையும் பாதித்திருக்கிறது என இந்த RDX பார்க்கும்போது தெரிகிறது.
நெல்சன் படங்களில் நடப்பது ஒரு தனி உலகத்தில், அவற்றிலும் சிலை கடத்தல் கஞ்சா கடத்தல் என பேக்கிரவுண்ட் ஒரு க்ரைம் கதை இருந்தாலும் அதில் க்ரைம் டீடெயில்ங் அதிகம் இல்லாமல், அதை அந்த உலகத்தை பின்னமட்டுமே எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியையும் லாஜிக்கை மீறி ஹுமர் செய்வதால் நமக்கு ஒரு ரியல் லைப் பார்க்கிறோம் என்ற எண்ணம் துளி கூட வருவதில்லை. இந்தப் படங்களில் எவ்வளவு பெரிய ஆக்ஷன் இருந்தாலும் படம் பார்த்தபின்னர் ஒரு பீல் குட் படமாக உணர்வே மேலோங்குகிறது.
லோகேஷ் காட்டுவதும் தனி உலகம் தான், ஆனால் அதில் நெல்சனை விட அதிக டீடெயிலிங் இருக்கிறது, அதனால் இன்னும் ரியாலிடிக்கு பக்கதில் இருப்பது போல தோன்றினாலும் அதுவும் தனிபுனைவுலகம் தான். அந்த க்ரைம் டீடெய்லிங் அதிகம் இருப்பதால் லோகேஷ் படங்களின் ஆக்ஷன் ஒரு டார்க் பீல் தருகிறது
லைட் பீல் தரும் நெல்சனுக்கும் டார்க் பீல் தரும் லோகேஷுக்குமே பெரிய வித்தியாசம் இருந்தாலும், இவையிரண்டிலுமே இயக்குனர் உருவாக்கும் தனி புனைவுலகத்தில் அதற்கான லாஜிக் கன்ஸிஸ்டண்டாக இருப்பதால், பார்வையாளர்களோடு எளிதாக கனெக்ட் ஆகி பெரிய ஹிட் அடிக்கின்றன.
இதைத்தான் RDX தவறவிடுகிறது.
RDX-ன் பிரச்சனை அந்த படத்துக்கான உலகம் சரியாக செட் செய்யப்படாமலே கடைசி வரை செல்கிறது. ஒவ்வொரு தடவை பில்ட் அப் மியூஸிக், இருபது முப்பது பேரை அடிக்கும் சண்டைகள் என ஒரு புறமும், இன்னொரு புறம் ரியல் லைப் சண்டை போல அப்போ அப்போ அடிபடுவதும் குழப்பத்தையே உருவாக்குகிறது.
நாம் மலையாள படங்களில் ரசிக்கும் இயல்பான காட்சிகள் அவ்வபோது வந்தாலும் அவை படத்தின் மொத்த மூடுக்கு இடையூறாகவே இருக்கின்றன.
சில சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் ஏதோ குறைகிறது. பட்ஜெட் லிமிடேஷன் என்று தெரிந்தாலும் கைதி அளவுக்கு இல்லாவிட்டாலும் மாநகரம் அள்வுக்கு கூட நேர்த்தி இல்லாமல் இருக்கிறது.
இந்த படம் கேரளாவில் பெரிய ஹிட், அவர்கள் உள்ளூர தமிழ்படங்களை விரும்பிக்கொண்டிருந்தார்கள் போல, ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமக்கு இது எந்த புதிய அனுபவத்தையும் தரவில்லை
நாம எவ்வளவு நாள் மலையாள படம் மாதிரி என பேசிக்கொண்டிருப்பது, மலையாள சினிமாவும் தமிழ் படம் மாதிரி என பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என ஒரு திருப்தி கிடைக்கலாம் இந்த படம் பார்த்தால்.