Unordered List

07 அக்டோபர் 2023

ஸ்டார்களும், நல்ல ப்ளேயர்களும் - ரச்சின்

பெற்றோருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கனும். நியூஸிலந்துவீரர் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) முதல் போட்டியில் தனது திறமையால், தன் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு புகழ்வாங்கிக்கொடுத்திருகக்கிறார். அவரது பெயரின் மீது கவனம் குவிந்துள்ளது. ரவீந்திரா சரி அதென்ன ரச்சின்?

ராகுல் ட்ராவிட் + சச்சின் டெண்டுல்கர் = ரச்சின் ரவீந்திரா

சமீபத்திய உரையாடலில் ஒரு நண்பர், சச்சின் இருந்ததால் தான் ட்ராவிடுக்கு கிடைக்கவேண்டிய புகழ் வராமல் போனது கூறினார். சச்ச்னின் விளையாடுவதும் ட்ராவிட் விளையடுவதும் வெவ்வேறு பொஸிஸன் மற்றும் ஸ்டைல், எனவே நேரடி பாதிப்பு இல்லை. தோனி மாபெரும் ஆளுமையோடு இருந்ததால் தினேஷ் கார்த்திக் உட்பட பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தார்கள் என சொல்வதுபோல அல்ல அது.

இருந்தாலும் அப்போது இருந்த ஊடக வெளிச்சம் புகழ் எல்லாம் சச்சினுக்கு இருந்ததால் ட்ராவிடை யாரும் கவனிக்கவில்லை, அதிரடி சச்சின் சாதனைகள் பேசப்பட்ட அளவு நிதானமான ட்ராவிடின் என சொல்கிறார் என புரிந்துகொண்டேன், அவரைப்போல பலருக்கும் கருத்து இருக்கிறது. அது ஒரு நல்ல ஆர்கியூமெண்ட் தான்.

இந்த ரச்சினின் பெற்றோர்களும் இப்படி நினைத்திருபார்கள் போல. அவர்கள் சச்சின் மீதும் ட்ராவிட் மீதும் சம மரியாதை வைத்து தங்கள் மகனுக்கு இருவர் பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.



ஆனால் யார் ஒரு நாயகன் என்பது அந்தந்த கால ஊடக பரபரப்பு அதிகார விளையாட்டு. ஒருவரை மட்டும் புகழ்வதா இன்னொருவரையும் பாருங்க என நினைக்கும் ரசிகர்களின் கருணை எல்லாம் மீறி காலம் வைக்கும் ஒரு தேர்வு உண்டு.

அதில் சந்தேகம் இன்றி வெளிப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.

"Tendulkar Was Definitely The Idol" - Rachin

இந்த ரச்சினின் சமீபத்திய பேட்டியில், தான் வளரும்காலத்தில் தனது ஆதர்சமாக இருந்தது சச்சினே என சொல்கிறார். தனது பெற்றோர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இரண்டு பெயர்களையும் இணைத்து இருந்தாலும், தனது மனதில் இருக்கும் பெயர் சச்சின் என சொல்லியிருக்கிறார்.
நல்ல திறமையான ப்ளேயர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இருந்தாலும் அதில் ஒருவர் ஸ்டாராக எழுகிறார், அவரே அடுத்த தலைமுறையை இன்ஸ்பிரேஷன் செய்து முன்னேற காரணாமாகவும் அமைகிறார். அது சச்சின்.

இந்தே ரச்சின் ரவீந்திராவின் இன்றைய இன்ஸ்ப்ரேஷன் விராட் கோலி. 





https://www.icc-cricket.com/news/3723515

04 அக்டோபர் 2023

RDX


நெல்சனும் லோகேஷும் எடுக்கும் ஆக்‌ஷன் படங்கள் மலையாள திரையுலகையும் பாதித்திருக்கிறது என இந்த RDX பார்க்கும்போது தெரிகிறது.


நெல்சன் படங்களில் நடப்பது ஒரு தனி உலகத்தில், அவற்றிலும் சிலை கடத்தல் கஞ்சா கடத்தல் என பேக்கிரவுண்ட் ஒரு க்ரைம் கதை இருந்தாலும் அதில் க்ரைம் டீடெயில்ங் அதிகம் இல்லாமல், அதை அந்த உலகத்தை பின்னமட்டுமே எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியையும் லாஜிக்கை மீறி ஹுமர் செய்வதால் நமக்கு ஒரு ரியல் லைப் பார்க்கிறோம் என்ற எண்ணம் துளி கூட வருவதில்லை. இந்தப் படங்களில் எவ்வளவு பெரிய ஆக்‌ஷன் இருந்தாலும் படம் பார்த்தபின்னர் ஒரு பீல் குட் படமாக உணர்வே மேலோங்குகிறது.


லோகேஷ் காட்டுவதும் தனி உலகம் தான், ஆனால் அதில் நெல்சனை விட அதிக டீடெயிலிங் இருக்கிறது, அதனால் இன்னும் ரியாலிடிக்கு பக்கதில் இருப்பது போல தோன்றினாலும் அதுவும் தனிபுனைவுலகம் தான். அந்த க்ரைம் டீடெய்லிங் அதிகம் இருப்பதால் லோகேஷ் படங்களின் ஆக்‌ஷன் ஒரு டார்க் பீல் தருகிறது
லைட் பீல் தரும் நெல்சனுக்கும் டார்க் பீல் தரும் லோகேஷுக்குமே பெரிய வித்தியாசம் இருந்தாலும், இவையிரண்டிலுமே இயக்குனர் உருவாக்கும் தனி புனைவுலகத்தில் அதற்கான லாஜிக் கன்ஸிஸ்டண்டாக இருப்பதால், பார்வையாளர்களோடு எளிதாக கனெக்ட் ஆகி பெரிய ஹிட் அடிக்கின்றன.


இதைத்தான் RDX தவறவிடுகிறது.


RDX-ன் பிரச்சனை அந்த படத்துக்கான உலகம் சரியாக செட் செய்யப்படாமலே கடைசி வரை செல்கிறது. ஒவ்வொரு தடவை பில்ட் அப் மியூஸிக், இருபது முப்பது பேரை அடிக்கும் சண்டைகள் என ஒரு புறமும், இன்னொரு புறம் ரியல் லைப் சண்டை போல அப்போ அப்போ அடிபடுவதும் குழப்பத்தையே உருவாக்குகிறது.
நாம் மலையாள படங்களில் ரசிக்கும் இயல்பான காட்சிகள் அவ்வபோது வந்தாலும் அவை படத்தின் மொத்த மூடுக்கு இடையூறாகவே இருக்கின்றன.


சில சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் ஏதோ குறைகிறது. பட்ஜெட் லிமிடேஷன் என்று தெரிந்தாலும் கைதி அளவுக்கு இல்லாவிட்டாலும் மாநகரம் அள்வுக்கு கூட நேர்த்தி இல்லாமல் இருக்கிறது.
இந்த படம் கேரளாவில் பெரிய ஹிட், அவர்கள் உள்ளூர தமிழ்படங்களை விரும்பிக்கொண்டிருந்தார்கள் போல, ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமக்கு இது எந்த புதிய அனுபவத்தையும் தரவில்லை
நாம எவ்வளவு நாள் மலையாள படம் மாதிரி என பேசிக்கொண்டிருப்பது, மலையாள சினிமாவும் தமிழ் படம் மாதிரி என பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என ஒரு திருப்தி கிடைக்கலாம் இந்த படம் பார்த்தால்.

15 ஆகஸ்ட் 2023

ஜெயிலர் - எது ரஜினி படம்? இது ரஜினி படமா?

ஜெயிலரில் ஒரு ஸ்டைலான பரபரப்பான சண்டைக்காட்சி, அதில் செம ஸ்டைலாக மெஷின் கன்னுடன் ரஜினி சண்டை செய்கிறார், ஆனால் நாம் ஒரு நெருடலோடு இருக்கிறோம். ரஜினி எப்படி ஒரு யூனிபார்ம் போட்ட காவல்துறை ஆட்களை அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது கொல்லலாம், அது அவர் பேசுவதற்கு எதிரானது இல்லையா என. உண்மையில் ரஜினி படங்களில் ரஜினிக்கு எதிரான காட்சிகள் இருந்ததே இல்லை என்றும் சொல்லமுடியாது. எந்திரன் படத்தில் ஒரு எளிய கோவிலில் லவுடுஸ்பீக்கர் வைத்தார்கள் என்பற்காக அந்த மக்களை கஞ்சா வியாபாரிகள் ரேஞ்சுக்கு அடிச்சு பறக்கவிட்ட காட்சிகளெல்லாம் இதே நெருடலோடு பார்த்தவர்கள் தான் நாம்.

ஆனால் அந்தக் காட்சியின் முடிவில் ஒரு ட்விஸ்ட் நான் எப்படி இவர்களைக் கொல்வேன், நான் இதைச் செய்யமாட்டடேன் என்று சொல்லி காவல் துறையை மியூசுவர் மரியாதையோடு முடிகிறது. நெல்சா நீ தான் ரெம்ப நாள் அப்புறம் ஒரு "ரஜினி படம்" எடுத்திருக்க என இயக்குனருக்கு மனதளவில் கைகுலுக்கினேன்.



சரி எது ரஜினி படம். 

ஓபனிங் சாங் ஒன்று இருந்தால், எஸ்பிபி முதல் பாட்டு பாடினால், சண்டை இருந்தால், சண்டை இல்லாமல் இருந்தால், பஞ்ச் டையலாக் இருந்தால், போன படத்தில் போட்ட சட்டை போட்டால் என ஒரு லிஸ்ட் போடுபவர்கள் பெரும்பாலும் கவனித்தால் ரஜினி மீது உள்ளூர ஏதோ வெறுப்பு கொண்டு ஆனால் அவரின் பிரம்மாண்ட வெற்றி அலையை எதிர்க்கவும் துணியாமல் அவர் இப்படி செய்திருக்கலாமே அப்ப்டி செய்திருக்கலாமெ என்பவர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பேச்சுகளைக் கடந்து தான் ரஜினியின் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

அப்ப்டியென்றால் ரஜினி படம் என்பது என்ன? தளபதி படத்தில் வில்லன் பேசும் ஒரு காட்சி இருக்கும் "உன்னை ஏன் அவன் கூட வெச்சு இருக்கான் தெரியுமா? உனக்கு பயம் இல்லை" என்று என. இது கிட்டத்தட்ட ரஜினி சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியில் சொன்னது. அண்ணாமலை படத்தில் வரும் பல வசனங்கள் அந்த காலகட்டத்தில் அவர் மேடையிலும் பேசியிருக்ககூடியது. பாட்ஷா, படையப்பா போன்றவை அந்தந்த காலகட்ட ரஜினி மனநிலையை காட்டுபவை ரஜினி படங்கள் என்பவை ரஜினியின் கேரக்டரை ஒரு சினிமா சூழலில் வைப்பவை. அதனால் தான் ரஜினி படங்களில் ஒரு தொடர்ச்சியும் மக்களோடு ஒரு தொடர்பும் இருக்கிறது. 

ஆனால் இந்தப் படங்களின் கலை வெற்றி என்பது, ஒரு சூழலுக்காக அந்தப் படம் எடுக்கபட்டது என்றாலும் அவை சரியான கலையாக மாறியதால் அந்த சூழல் தெரியாதவர்களாலுல் ரசிக்கப்படுகிறது. உதாரணமாக படையப்பா படம் ஜெயலலிதா உடனான அவரது சர்ர்சைகள் போல இருந்தாலும், தமிழக அரசியல் சூழல் தெரியாத ஆந்திரத்தில் படம் வந்தபோதே பெருவெற்றி அடைந்தது. அண்ணாமலை பாட்ஷா ஆகியவை, சூழல் முழுவதும் மாறியபின்னரும் இன்றும் பார்க்கப்படுகின்றன. 

அப்படினா ரஜினி நிஜ வாழ்க்கையில் பறந்து பறந்து அடிப்பரா, துப்பாக்கி எடுத்து சுடுவாரா என கேட்டால் நீங்க வேற கேட்டகரி. நாம் எழுதுவது உங்களுக்கு அல்ல.

தன் ஸ்டைல் எதுவும் குறையாமல் ரஜினியின் வழக்கமான கிம்மிக்ஸ் எதுவும் இல்லாமல் மணிரத்னம் எடுத்தது ஒரு ரஜினி படம். ரஜினியின் ஸ்டைலுக்காக பாட்டு வைத்து எடுத்த எந்திரன் ரஜினி படம் அல்ல. அது நல்ல வெற்றிகரமான ஷங்கர் படமாக இருக்கலாம், அது வேற விஷயம்.

வெகுநாட்களுக்குப் பிறகு நெல்சன் எடுத்த ஜெயிலர், நாம் நெல்சனிடம் ரசித்த அத்தனை விஷயங்களும் குறையாமல் நெல்சனின் ஒரிஜினாலிட்டி குறையாமல் வந்த ரஜினி படம் என சொல்லத்தக்க அத்தனை அம்சங்களும் உடையதாக இருக்கிறது.

"என்னை எல்லோரும் திட்டிட்டே இருக்கீங்க இல்ல, நான் யாருன்னு காட்டுறேன்" என ரஜினி ஓபனிங் டையலாக்க் பேசும்போது தியேட்டர் அதிர்கிறது. அது அப்படி ஒன்னும் "பஞ்ச் டையலாக்" இல்லையே என புரியதவர்கள் பார்க்கிறார்கள். ஒரு ஒரு இடத்தில் க்ளோஸப் ஷாட்டில் "கோவில் சொத்தை திருடாதீங்கடா நாசமாப் போயுடுவீங்க" என்கிறார். 

இந்தப் படத்தில் அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்படும்போது பல மாநிலங்களின் முக்கிய ஆட்களிடம் உதவி கெட்கும்போது அவருக்கு உதவ எந்தக் கேள்வியும் இல்லாமல் ஓட்டோடி வருகிவதும், உண்மையில் அந்த நடிகர்கள் கதையே சொல்லவேண்டாம் ரஜினி படம் என்றால் நடிக்கிறோம் என்று ஓடோடி வந்ததும் எளிதா கனெக்ட் செய்ய முடிகிறது என்றாலும் ரஜினிக்கு அரசியலில் பல மாநில தொடர்பு இருப்பதும். ரஜினி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தமிழகத்தில் வேறு எந்த நடிகர் வீட்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதெல்லம் நினைவுக்கு வருகிறது.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பெரிய தாதா, சரி அவர் என்ன வேலை செய்கிறார் என்ற டீடெயிலிங் இருக்குமா என்றால் இருக்காது, எப்படி கடத்துவது என்ற டெக்னிக் இருக்காது, அந்த இயக்குனருக்கு அது செய்யத்தெரியாதா என்றால் ரஜினி படத்தில் அது செய்யகூடாது என்பதே பதில். தாதாவாக இருப்பதும் ஜெயிலாரக இருப்பதும் ஒரு நிமித்தம் மட்டுமே. அங்கே கடத்தபடவேண்டியது நாயகனின் பெர்சனாலிட்டி மட்டுமே அதை ஜெயிலரும் சரியாக செய்திருக்கிறது. எப்படி கஞ்சா கடத்தனும், எப்படி சிலைகளை கடத்தனும் என்ற டீடெய்லிங் இல்லாமல். அதுவே நெல்சன் மற்றும் ரஜினி படங்களின் அபத்த வன்முறையையும் ஒரு காமிக் சென்சுடன் கொண்டு செல்கிறது. 

பாட்ஷா வந்தபோது அந்தப் படம் அதிக வன்முறை இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலிதா அறிக்கை விட்டார், இப்போது சிலர் பாட்ஷா பிரச்சனை இல்லை, ஆனால் ரஜினி படத்தில் வன்முறை இருக்கலாம என என்கின்றனர். சினிமாக்களில் வன்முறை என்பது தனி விவாதம் அது ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு சென்சார் எதிர்பார்ப்பது தவறு, ஒப்பிட மற்ற படங்களை விட ரஜினி நெல்சன் இருவருமே ரியலிட்டிக்கு வெளியே உள்ளவை எனவே வன்முறையின் தாக்கம் ஒப்பிட குறைவு. ரஜினி படத்தை ரஜினி படமாக்குவது சண்டை இருப்பதோ இல்லாமல் இருப்பதோ அல்ல.

கடைசியா ஒரு கேள்வி, நமக்குப் பிடித்த நடிகர், இயக்குனர் என்றால் ரெம்ப ஓவரா சப்போர்ட் செய்கிறோமா என.  ரிலீஸ் அன்று படம் பார்த்து கொண்டாடுபவர்கள், கஷப்பட்டு முதல்நாள் படம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்துப்வர்களை விட நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என தானே சொல்லனும். நண்பர்களோடு சேர்ந்து சில நேரங்களில் சின்ன மகிழ்ச்சிக்கு கொண்டாடி சிரிப்போம், அது பெட்டர் தான் இல்லையா.

வெகுநாட்களுக்குப் பின் ஒரு ரஜினி படம்,  இதில் இருப்பது கடந்தகாலம் அல்ல இது இன்றைய சூழல். இந்தப் படம் நாம் கொண்டாட மகிழ மற்றும் நமக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள.

03 மார்ச் 2023

நாய் ஆர்வலர்கள்

 காக்கா சிட்டுக்குருவி போல நாய் ஒரு இயற்கையான விலங்கு அல்ல, அது ஒரு மனிதனுக்கு கீழே இருக்கும்படி "உருவாக்கப்பட்ட" ஒன்று. எனவே யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ளாத தெரு நாய் என்பது ஆபத்து.


ஆனால் விலங்கு ஆர்வலரகள் இதை தவறாக புரிந்துகொண்டு தெருநாய்களை ஆதரிப்பதன் வழியாக மனிதனுக்கு எதிராக செயலப்டுகிறார்கள். இதன் முக்கிய காரணம் இந்த "இரக்கம்" பேசுபவர்கள் பலர் இந்த சிஸ்டத்துக்கு வெளியே இருந்து கருத்து சொல்பவர்கள். நேற்று வடஇந்தியாவில் இரு பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தூக்கிச்சென்று கொன்றிர்ருக்கின்றன. போனமாதம் ஒரு ஸ்விகி டெலிவரி பையன், சரியாக கட்டுப்படுத்தப்டாத வீட்டு நான் நாய் துரத்தி கீழே விழுந்து இறந்திருக்கிறான். ஆனால் தெருநாய் மீது பரிவு பேசும் யாரும் ஒருநாளும் டெலிவர் பையனாகவோ, அந்த தாய் போன்ற பாதுபாப்பற்ற இடத்தில் தூங்குபவர்களாக்வே இருப்பதில்லை என்பதால், சோபாவில் படுத்துக்கொண்டு இரக்கம் பேசுகிறார்கள். இது நம் நண்பர்கள் உடப்ட எங்கும் இருக்கும் மனநிலை தான்.


நாய்களுக்கு மனிதர்களை பெறுப்பாக்குவது புதிய விஷயம் அல்ல நான் பார்த்தவரை வளர்ந்தநாடுகளில் அப்ப்டித்தான் இருக்கிறது, பார்க்கில் தன் நாயின் கழிவுகளை ஓனர்கள் தான் அப்புறப்படுத்துகிறர்கள்.


நாய் என்பது ஒரு டூல், அது மனிதனுக்கு கட்டுப்பட்டு தான் இருக்கவேண்டும், ஏனென்றால் அது ஒரு இயற்கை விலங்கே அல்ல. நாயின் செய்ல்களுக்கு அந்த ஓனர் பொறுப்பாளாராக இருக்கவேண்டும். அப்படி மனித பொறுப்பேற்கத நாய் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுதுவது அரசின்கடமையாக இருக்கவேண்டும்

18 செப்டம்பர் 2022

ஜெயமோகன் 60

 எனக்கு ஒரு புதிய பயண அனுபவம் கிடைக்கும் போது, ஒரு அபுனைவு புத்தகம் என்னைக் கவரும்போது, ஒரு புதிய டெகானலிஜில் வேலை செய்து அதன் சாத்தியங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும்போது, ஒரு வரலாற்று அவதானிப்பை கண்டடையும்போது, அல்லது சென்னையில் ஒரு பெரு வெள்ளம் வரும்போது என நான் எழுத்தாளார் ஜெயமோகனோடு கடிதம், கட்டுரை அல்லது நேர் பேச்சில் தொடர்புகொண்ட சில தருணங்கள் நினைவில் இருக்கின்றன.


தமிழ் இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளரான அவரிடம்  சம்பந்தம்   சம்பந்தம் இல்லாத இந்த விஷயங்களை ஏன் உரையாடுகிறோம். ஏனென்றால் இவை அனைத்திலும் அவரால் உரையாட முடியும், பெரும்பாலன சமயங்களில் அதற்கு மேல் நுட்பத்தை ஒரு தொடர்பை அவரால் நமக்கு காட்ட முடியும்.

விஞ்ஞானிகள் என்ற பட்டத்தோடு உலகில் நிறையபேர் இருந்தாலும் நோபல் பரிசு பெருபவர்கள் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் அவர்களின் இந்த பல் துறை அறிமுகத்தை, ஒருதுறையில் அறிவு சாதனையை இன்னொரு துறையில் பொருத்திப்பார்க்கும் திறனைத்தான் சொல்கிறார்கள்.

ஜெயமோகனின் இந்த பன்முகத்தன்மையை, அவரது படைப்புகளை மட்டும் வாசிப்பவர்களும் அடையலாம். உதாரணமாக வெண்முரசு நாவல்களிலேயே இன்று வரை நடந்துள்ள அறிவியல் வரலாற்று சாதன்னைகளையும் காணலாம், உதாரணமாக, பீமனும் துரியனும் சண்டையிடும் இடத்தில் மெஷின் லேர்னின் கான்செட்ப் ஒத்து வருவது பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.

எழுத்தாளார் ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன என்று ஒன்றைக் கேட்டால் பலதுறை நுட்பமும் அதை தொகுத்து ஒரு ஸினர்ஜி உருவாக்கும் தன்மையும் என்று சொல்லலாம்