Unordered List

20 ஏப்ரல் 2011

நம்ம டீம்.. விசில் போடு..

ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு சின்ன கேள்வி கேட்டதற்காக என் நண்பன் என்னை கசமுசாவெனத் திட்டிவிட்டான்!"இன்னிக்கு மேட்ச்ல நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்டா.." என்றான் என் நண்பன். அவனின் நம்பிக்கை எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், நான் எதுவும் எனக்குச் சின்ன சந்தேகம். நானா? விளையாடவா? விளையாடி ஜெயிக்கவா? ஹ.. ஹ.. ஹே..."நாம ரெண்டுபேரும் ஏதாவது விளையாடப்போகிறோமா? எங்கேடா? நாம ஜெயிக்கிற அளவுக்கு யாருடா அந்த டுபாகூர் டீம் " உண்மையிலேயே ஆர்வத்துடன் தான் கேட்டேன்.அதற்குத்தான்...

16 ஏப்ரல் 2011

ரஜினி ரசிகனுக்கு சோதனை

பத்திரிக்கைச் சுதந்திரம் இருப்பது நல்லது தான். ஆனால்.. நமது பத்திரிக்கையாளர்கள் அந்தச் சுதந்திரத்தை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார்கள் போல. ரஜினி ஓட்டுப் போட்டதைக்கூட உள்ளேசென்று எட்டிப்பார்த்துப் படம்பிடித்த பத்திரிக்கைகளின் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாகியுள்ளது. அவர் ஓட்டுப்போட்டதை எட்டிப்பார்த்துவிட்டு அதற்கும் பல கருத்துக்கள் சொல்லலும் பத்திரிக்கைகளை என்ன சொல்வது? பத்திரிக்கை...

14 ஏப்ரல் 2011

தேர்தலில் முதல் வெற்றி..

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், தமிழக தேர்தலில் முதல் வெற்றியாளர் யாரென்று தெரியவந்துள்ளது.அந்த வெற்றியாளர் யார். வேறு யார்? அது தேர்தல் ஆணையம் தான்.தேர்தல் நேர்மையாகத்தான் நடக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்கள் ஜனநாயத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தும். அந்த நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்படுவதாகத் தெரிகிறது.சில குறைபாடுகள் இருந்தாலும், இன்னும் சில தேர்தல்களில் இன்னும் பல முன்னேற்றங்கள் வரலாம் என்றும் நம்பிக்கை...

06 ஏப்ரல் 2011

உலகக் கோப்பை எங்கே?

இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் பலருக்கு ஏமாற்றம் தான். தோல்வியில் இருக்கும் பரபரப்பு வெற்றியில் இல்லை! செய்தி தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்தியா மட்டும் தோற்று இருந்தால், தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியிருக்கலாம். சச்சினை அணியிலிருந்தே தூக்கியிருக்கலாம். பலரை பந்தாடியிருக்கலாம். எல்லாம் போச்சு.. இப்போது வரும் செய்தியெல்லாம் அவருக்கு ஒரு கோடி, இவருக்கு ரெண்டு...

01 ஏப்ரல் 2011

அந்தத் தேர்தல் எப்போ?

தேர்தல் வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்..தலைவர்கள் பிரச்சாரம்.. பல வாக்குறுதிகள் என எங்கும் பரபரப்பு.சரி.. அப்படி என்ன தான் சொல்கிறார்கள் சில நாட்களாக செய்திகளில் கவனிக்கும்போது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.மிக்சி, கிரைண்டர், பேன், கலர் டிவி என பல வாக்குறுதிகள். இதில் யார் சொன்னதெல்லாம் சரியாக கொடுப்பார்கள், யார் சரியாக கொடுக்கமாட்டார்கள் என பரபரப்பான விவாதம்.இதில் என்ன சந்தேகம்?இதை சரியாக கொடுப்பார்களா என்றா? இல்லை.. அது இல்லை நமது சந்தேகம்.இது எல்லாம் விவரம் இல்லாமல் அவசரப்பட்டு முன்னாடியே வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது?...