Unordered List

12 அக்டோபர் 2023

உறையவிட்டு வாளெடுத்தா - காக்கும் வீரன் விராத் கோலி

ரோஹித் அவுட் ஆனதும் கோலி தட்டிக்கொடுத்து அனுப்பும் போட்டோ நேற்று பரப்ரப்பாக பகிரப்பட்டது. என்ன சார் இது ஒருவர் சென்சுரி அடுச்சி இருக்காரு ஆனால் அவரை முன்னிலைப் படுத்தமல், அவர் அவுட் ஆனதும் ஆறுதலா தட்டிக்கொடுப்பதை ஒரு பெரிய விஷயமா பார்ப்பதா என கேட்டார் நண்பர் ஒருவர். அந்த போட்டோ பரபரப்பாக பார்க்கப்பட்டதற்கு காரணம் இல்லமால் இல்லை.



இதுவரை இரண்டு மேட்ச் முடிந்தநிலையில் இரண்டிலுமே 50 அடித்திருக்கிறார் கோலி, உறைய விட்டு வாளெடுத்தா கோலியின் பேட் ரத்த ருசி பார்க்காமல் விடுவதில்லை. ஆனால் நேற்றைய மேட்ச் நினைவில் இருக்கப்போவது ரன்களுக்காக அல்ல், அதை விட முக்கிய விஷயம் இருக்கிறது.
நேற்று ரசிகர்கள் ஆப்கன் அணி கடைசியில் நவீன் பேட்டிங் வரும்போதே அது ஆரம்பித்தது, ரசிகர்கள் அவன் மீது கடும் கிண்டலில் இறங்கினர், ஏனென்றால் ஏற்கனவே ஐபில் ல் அவர் கோலியோடு ஏற்பட்ட ஒரு சச்சரவில் இறங்கியது தான் மீண்டும் பீல்டிங் வரும்போது அதே கிண்டல்கள்.


விராத் கோலி பேட்டிங் இறங்கியதும் அதை கவனித்து நவீனை அணைத்து, பிரச்சனை ஏதும் இல்லை என ரசிகர்களுக்குக் காட்டினார். விளையாட்டு என்பது தீவிரத்துடன் விளையாடப்படவேண்டியது, அதில் அவ்வப்பொது அந்த தருணத்தின் தீவிரத்தால் சச்சரவுகள் வருவது இயல்பு அது தான் விளையாட்டின் அழகு, ஆனால் அதை வன்மமாம மனதில் வைத்திருக்கக்தேவையில்லை.
நேற்று அடித்த ரன்களை விட நவீனை மன்னித்து தட்டிக்கொடுத்து ரசிகர்களுக்கு விளையாட்டின் நற்பண்பை காட்டியதே இந்த நேற்றைய விளையாட்டின் உண்மையான பெரிய மொமெண்ட்.
அவரே சண்டை போடுவாராம், அவரே கட்டியணைப்பாராம் என சிலர் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேற்று கோலி காட்டிய பெருந்தன்மை தனி நிகழ்வல்ல,


2019ல் ஆஸ்திரேலிய முன்னால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும்போது அவருக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் நமக்குத் தெரியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அவர் முன்பு பால் டெம்பரிங் செய்த குற்றச்சாட்டுக்காக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானபோதும் இதே கோலி, அப்படி கிண்டல் செய்வது தவறு என ரசிகர்களுக்கு உரிமையாக பாடம் எடுத்தவர்
நிஜவீரன் தாக்குபவன் மட்டுமல்ல, யார் வேண்டுமானால் தாக்கமுடியும். காப்பவனே நிஜ வீரன். ஆஸ்திலியாவுக்கு எதிரான மேட்சியில் அணியைப் காப்பாற்றியதை விட, இந்த மேட்சில் sprit of cricket காப்பாற்றியது க்ரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் நிறைவளிப்பதாக இருக்கிறது.

11 அக்டோபர் 2023

எழுத்தாளரின் ஹீரோயிசம் - michael lewis

ஆறேழு வருடங்களுக்கு ஒரு அலுவலக மீட்டிங்கில் ஒரு உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட புத்தகம் Flashboys, அந்தப் பெயர் சட்டென கவர அதை குறித்துவைத்துக்கொண்டேன், அன்று மாலையே வாசிக்கத் தொடங்கினேன். நான் மொபைலில் கிண்டில் ஆப் வழியாக வாசித்த முதல் புத்தகமும் அது தான்.

Michael Lewis எழுதிய Flashboys அமெரிக்க பங்குச்சந்தையில் high frequency ட்ரேடிங் பற்றி ஒரு விரிவான சித்திரத்தை அளித்து அதன்பின், அந்த புதிய டெக்னானலஜியினால் மட்டுமே சாத்தியமாகிய ஒரு முறைகேடுபற்றி விளக்கி, அதற்கு காரணமான தொழிநுட்ப மற்றும் அரசியல் காரணங்களை நமக்கு காட்டி, பின்னர் அது எப்படி வெற்றிகரமாக வெல்லப்பட்டது என காட்டும் புத்தகம்.



ஷேர் மார்க்கெட் பற்றி உள் விவகாரங்கள் தெரியாத நமக்கே இதில் துல்லிய தகவல்கள் புரியும் படி இருந்தாலும், அது பாடம் நடத்துவதுபோல் இல்லாமல், அதை வாசிக்கும் அனுபவம் நாம் பார்க்கும் மாஸ் திரைப்படங்களுக்கு சற்றும் குறைவில்லாது. நான் கிண்டில் ஆப்பில் வாசித்ததால். வீட்டில், வெளியில், எலெக்ரிக் ட்ரெயில் என தொடர்ச்சியாக அதை வாசித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து michael lewis எனது மரியாதைகுரிய ஒரு எழுத்தாளராகிவிட்டார்.

வழக்கமாக ஒரு போர் நடந்தால், ஒரு தலைவர் உருவானால், ஒரு விளையாட்டுவீரர் பிரபலமடைந்தால் அதைப்பற்றிய புத்தகங்கள் வருவது இயல்பு, ஆனால் இங்கு தான் மைக்கேல் லூயிஸ் மாறுபடுகிறார்.

மைக்கேல் லூயிஸ் ஹீரோக்களை பற்றி எழுதுவதில்லை, அவர் எழுதுவதால் அவர்கள் ஹீரோக்களாகிறார்கள்.

அதாவது ஒரு பெரிய நிகழ்வு நடந்து அது உலத்தின் கண்களுக்கு தெரியாதபோது அதைப்பார்க்கும் சிறப்பு "கண்கள்" இவருக்கு இருக்கிறது என்பதே இவரைப்பற்றி சொல்ல்ப்படும் சிறப்பு

உதாரணமாக,

Flash boys - அமெரிக்க சந்தையின் high frequcy trading, அதில் உருவான ஹீரோ Brad Katsuyama

Big Short - 2008 சந்தை சரிவைப் பற்றியும் அதில் வென்றவர்களையும் காட்டியது. Michael Burry, Steve Eisman உட்பல சில ஹீரோகளை சுட்டிக்காட்டியது.

இப்படி ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு நிகழ்வு, அது நடந்த வரலாற்று சூழல், புறக்காரணிகள், அங்கு வென்ற மனிதர்கள் வென்றதற்கான காரணம் என மிக விரிவாக்வே காட்டும் ஸ்டைல் இவருடையது.
ஒரு புத்தகம் வாசித்தால் அதைப்பற்றி நண்பர்களிடம் பேசுவதை வழக்க்காமக் கொண்டிருபபதை என் நண்பர்கள் அறிவார்கள். இவரைப் பற்றி காளிபிரசாத்திடம் பல்வேறு தருணங்களில் பேசியிருபப்து நினைவுக்கு வருகிறது.
சரி இப்போ எதற்கு இவரைப் பற்றி பழைய கதை என்றால்,

ஹீரோக்களை உருவாக்கும் இவரது புத்தக வரிசையில் இந்த வருடம் வந்துள்ள புத்தகம், அவரது ஹீரோ இமேஜையே டேமேஜ் செய்யும் அள்வுக்கு விமர்சிக்கப்படுகிறது. அது இன்னொரு பதிவில் 

07 அக்டோபர் 2023

வனவிலங்குகளும் ஹீரோயிசமும்

4 மனிதர்களையும், 20 கால்நடைகளையும் கொன்ற ஒரு புலியை என்ன செய்யலாம்?

அதை அடிச்சி கொன்னு கொலைபண்ணி... என ஒருவர் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சிலர் நினைத்துக்கொண்டிருந்தனர்.

ஒருமுறை ஒரு மனிதரைக் கொன்ற ஒற்றை யானையை பிடிக்க பழங்குடியினரிடம் வனத்துறை உதவிகேட்டபோது அதை அவர்கள் மறுத்துவிட்டனர், இந்த யானையின் இணையை வனத்துறை பிடித்ததே இந்த யானை கோபமடந்ததற்குக் காரணம் என அதன்மீது பழியுணர்ச்சி இல்லாமல் இருந்ததை Danny Naveh என்ற மானுடவியலாலர் பதிவு செய்திருக்கிறார்.



T23 புலியின் சம்பவம் தமிழ்நாட்டின் ஒரு திருப்புமுனை. இந்த விழுமியம் பொது சமூகத்தை அடைந்த இடம் இது.
வனவிலங்குகள் பாதுகாக்கப்ப்டவேண்டியவை. மனிதர்களின் தண்டனையை அவற்றுக்கு அளிக்கக்கூடாது, மனிதர்களைக் கொன்ற புலி என்றாலும் அதை பாதுகாப்பது சமுதாயமாக நமது கடமை என தமிழ்நாடு முன்னகர்ந்த இடம் அது. முன்பு பொதுவெளியில் இருந்த மதிபீடுகளை முன்னகர்த்திய பெருமையை இலக்கியம், பத்திரிகைகள், கலை, சோஷியல்மீடியா என அனைவரும் பகிர்ந்துகொள்ள உரிமை இருக்கிறது.


சரி, அப்படி ஒரு நேரத்தில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டால் தற்காத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமா என்றால், தற்காத்துக்கொள்ளலாம், ஆனால் wild life converation என்ற இன்றைய நிலையில் அது பெருமைக்குரிய விஷயம் அல்ல. வனவிலங்குகளைத் தாக்குவது பெருமைக்குரிய விஷயம் என்ற புள்ளியில் இருந்து நாம் முன்னேறி வந்துவிட்டிருக்கிறோம் என நம்புவதே நல்லது.

வனவிலங்கை தாக்கியது அல்ல, அதைக் காப்பாறியதே தமிழ்நாட்டின் ஹீரோயிசம்


ஸ்டார்களும், நல்ல ப்ளேயர்களும் - ரச்சின்

பெற்றோருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கனும். நியூஸிலந்துவீரர் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) முதல் போட்டியில் தனது திறமையால், தன் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு புகழ்வாங்கிக்கொடுத்திருகக்கிறார். அவரது பெயரின் மீது கவனம் குவிந்துள்ளது. ரவீந்திரா சரி அதென்ன ரச்சின்?

ராகுல் ட்ராவிட் + சச்சின் டெண்டுல்கர் = ரச்சின் ரவீந்திரா

சமீபத்திய உரையாடலில் ஒரு நண்பர், சச்சின் இருந்ததால் தான் ட்ராவிடுக்கு கிடைக்கவேண்டிய புகழ் வராமல் போனது கூறினார். சச்ச்னின் விளையாடுவதும் ட்ராவிட் விளையடுவதும் வெவ்வேறு பொஸிஸன் மற்றும் ஸ்டைல், எனவே நேரடி பாதிப்பு இல்லை. தோனி மாபெரும் ஆளுமையோடு இருந்ததால் தினேஷ் கார்த்திக் உட்பட பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தார்கள் என சொல்வதுபோல அல்ல அது.

இருந்தாலும் அப்போது இருந்த ஊடக வெளிச்சம் புகழ் எல்லாம் சச்சினுக்கு இருந்ததால் ட்ராவிடை யாரும் கவனிக்கவில்லை, அதிரடி சச்சின் சாதனைகள் பேசப்பட்ட அளவு நிதானமான ட்ராவிடின் என சொல்கிறார் என புரிந்துகொண்டேன், அவரைப்போல பலருக்கும் கருத்து இருக்கிறது. அது ஒரு நல்ல ஆர்கியூமெண்ட் தான்.

இந்த ரச்சினின் பெற்றோர்களும் இப்படி நினைத்திருபார்கள் போல. அவர்கள் சச்சின் மீதும் ட்ராவிட் மீதும் சம மரியாதை வைத்து தங்கள் மகனுக்கு இருவர் பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.



ஆனால் யார் ஒரு நாயகன் என்பது அந்தந்த கால ஊடக பரபரப்பு அதிகார விளையாட்டு. ஒருவரை மட்டும் புகழ்வதா இன்னொருவரையும் பாருங்க என நினைக்கும் ரசிகர்களின் கருணை எல்லாம் மீறி காலம் வைக்கும் ஒரு தேர்வு உண்டு.

அதில் சந்தேகம் இன்றி வெளிப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.

"Tendulkar Was Definitely The Idol" - Rachin

இந்த ரச்சினின் சமீபத்திய பேட்டியில், தான் வளரும்காலத்தில் தனது ஆதர்சமாக இருந்தது சச்சினே என சொல்கிறார். தனது பெற்றோர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இரண்டு பெயர்களையும் இணைத்து இருந்தாலும், தனது மனதில் இருக்கும் பெயர் சச்சின் என சொல்லியிருக்கிறார்.
நல்ல திறமையான ப்ளேயர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இருந்தாலும் அதில் ஒருவர் ஸ்டாராக எழுகிறார், அவரே அடுத்த தலைமுறையை இன்ஸ்பிரேஷன் செய்து முன்னேற காரணாமாகவும் அமைகிறார். அது சச்சின்.

இந்தே ரச்சின் ரவீந்திராவின் இன்றைய இன்ஸ்ப்ரேஷன் விராட் கோலி. 





https://www.icc-cricket.com/news/3723515

04 அக்டோபர் 2023

RDX


நெல்சனும் லோகேஷும் எடுக்கும் ஆக்‌ஷன் படங்கள் மலையாள திரையுலகையும் பாதித்திருக்கிறது என இந்த RDX பார்க்கும்போது தெரிகிறது.


நெல்சன் படங்களில் நடப்பது ஒரு தனி உலகத்தில், அவற்றிலும் சிலை கடத்தல் கஞ்சா கடத்தல் என பேக்கிரவுண்ட் ஒரு க்ரைம் கதை இருந்தாலும் அதில் க்ரைம் டீடெயில்ங் அதிகம் இல்லாமல், அதை அந்த உலகத்தை பின்னமட்டுமே எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியையும் லாஜிக்கை மீறி ஹுமர் செய்வதால் நமக்கு ஒரு ரியல் லைப் பார்க்கிறோம் என்ற எண்ணம் துளி கூட வருவதில்லை. இந்தப் படங்களில் எவ்வளவு பெரிய ஆக்‌ஷன் இருந்தாலும் படம் பார்த்தபின்னர் ஒரு பீல் குட் படமாக உணர்வே மேலோங்குகிறது.


லோகேஷ் காட்டுவதும் தனி உலகம் தான், ஆனால் அதில் நெல்சனை விட அதிக டீடெயிலிங் இருக்கிறது, அதனால் இன்னும் ரியாலிடிக்கு பக்கதில் இருப்பது போல தோன்றினாலும் அதுவும் தனிபுனைவுலகம் தான். அந்த க்ரைம் டீடெய்லிங் அதிகம் இருப்பதால் லோகேஷ் படங்களின் ஆக்‌ஷன் ஒரு டார்க் பீல் தருகிறது
லைட் பீல் தரும் நெல்சனுக்கும் டார்க் பீல் தரும் லோகேஷுக்குமே பெரிய வித்தியாசம் இருந்தாலும், இவையிரண்டிலுமே இயக்குனர் உருவாக்கும் தனி புனைவுலகத்தில் அதற்கான லாஜிக் கன்ஸிஸ்டண்டாக இருப்பதால், பார்வையாளர்களோடு எளிதாக கனெக்ட் ஆகி பெரிய ஹிட் அடிக்கின்றன.


இதைத்தான் RDX தவறவிடுகிறது.


RDX-ன் பிரச்சனை அந்த படத்துக்கான உலகம் சரியாக செட் செய்யப்படாமலே கடைசி வரை செல்கிறது. ஒவ்வொரு தடவை பில்ட் அப் மியூஸிக், இருபது முப்பது பேரை அடிக்கும் சண்டைகள் என ஒரு புறமும், இன்னொரு புறம் ரியல் லைப் சண்டை போல அப்போ அப்போ அடிபடுவதும் குழப்பத்தையே உருவாக்குகிறது.
நாம் மலையாள படங்களில் ரசிக்கும் இயல்பான காட்சிகள் அவ்வபோது வந்தாலும் அவை படத்தின் மொத்த மூடுக்கு இடையூறாகவே இருக்கின்றன.


சில சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் ஏதோ குறைகிறது. பட்ஜெட் லிமிடேஷன் என்று தெரிந்தாலும் கைதி அளவுக்கு இல்லாவிட்டாலும் மாநகரம் அள்வுக்கு கூட நேர்த்தி இல்லாமல் இருக்கிறது.
இந்த படம் கேரளாவில் பெரிய ஹிட், அவர்கள் உள்ளூர தமிழ்படங்களை விரும்பிக்கொண்டிருந்தார்கள் போல, ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமக்கு இது எந்த புதிய அனுபவத்தையும் தரவில்லை
நாம எவ்வளவு நாள் மலையாள படம் மாதிரி என பேசிக்கொண்டிருப்பது, மலையாள சினிமாவும் தமிழ் படம் மாதிரி என பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என ஒரு திருப்தி கிடைக்கலாம் இந்த படம் பார்த்தால்.